ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பேல்பூரி

ஆறுதல் என்பது உன் காயத்திற்கு தற்காலிகத் தீர்வு.மாறுதல் என்பது உன் காயத்திற்கு நிரந்தரத் தீர்வு.

News image
Updated On :10 அக்டோபர் 2020, 12:50 pm

தினமணி

கண்டது

(சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள ஒரு பொம்மைக் கடையின் பெயர்)

கூகுள் பேன்சி வேர்ல்ட்  

த. லட்சுமி காந்த்,  சென்னை - 61.

(சேலம் பழைய மாநகராட்சிக் கட்டடத்தின் பின்புறம் உள்ள தெருவின் பெயர்)


குண்டு போடும் தெரு

கி.சரஸ்வதி,  திண்டல்.

(கரூரில் பிரபல ஹோட்டல் ஒன்றில் கண்ட வாசகம்)

நல்ல நேரம் : 24  மணி நேரமும்
கெட்ட நேரம்:  சோம்பலாக இருக்கும் நேரம் 
ராகு காலம் : புறங்கூறும் நேரம்!

-வி. ரேவதி, தஞ்சை


கேட்டது

(மெயின் பஜாரில் நடை பயிற்சியின்போது இருவர்)


""என்ன சார்! வாக்கிங் போகும் போதும் மாஸ்க் தானா?''
""பின்னே! இந்த மாஸ்க் வந்த பிறகு நிறைய பிரச்னைகள் குறைஞ்சிருச்சே!''
""அப்படியா! எப்படி?''
""தேவையில்லாமப் பேசுறது குறைஞ்சு போச்சுல! அப்புறம் எப்படி பிரச்னை வரும்!''
""அடடே! அப்போ, வீட்டுக்குள்ளேயும் போட்டுக்கலாம்னு சொல்லுங்க!''

இர.கிருத்திக்குமார்,  நெய்வேலி.

(நாகர்கோவிலில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றில் கணவனும் மனைவியும்)

""ஏங்க... உங்க மேனேஜர் ரொம்ப கண்டிப்பான ஆள் ஆச்சே... நீங்க லீவு கேட்டதும், எப்படி  உடனே லீவு தந்தார்?''
""போன்ல லீவு கேட்குகறப்ப இரண்டு தடவை தும்மல்  போட்டேன் . மனுஷன் 
அரண்டுட்டார்!''

மகேஷ் அப்பாசுவாமி,  
பனங்கொட்டான் விளை.


யோசிக்கிறாங்கப்பா!

நா அடக்கம்...
வாழ்க்கைக்கும் வயிற்றுக்கும் நல்லது!

நா.இரவீந்திரன்,  
வாவிபாளையம்.

மைக்ரோ கதை

திருவாரூர் புலிவலம் லெட்சுமி நகரில் ஒரு வீடு. கணவன், ""ஆனந்தி, பாத் ரூமில் சோப்பு இருக்கு எடுத்துட்டு வாயேன்'' என்றான். 
""வரேன்''  
 ""மாடியிலே துண்டும் ஜட்டியும் காயுது எடுத்துக்  கொடேன்''
""படுத்துறீங்க'' என்றாள் சிறிது கோபமாக ஆனந்தி.
""அப்படியே பீரோவில் வேட்டி இருக்கும்''
கடுப்பாகி போன ஆனந்தி, ""இந்தாங்க. இனிமே துக்க வீட்டுக்கு போறதா இருந்தா குளிச்சிட்டே போய்டுங்க... போய்ட்டு வந்து என் உயிரை வாங்காதீங்க'' என்றாள் கோபத்துடன்.

என்.தமிழ்காவலன், திருவாரூர்.

எஸ்.எம்.எஸ்.


ஆறுதல் என்பது உன் காயத்திற்கு தற்காலிகத் தீர்வு.
மாறுதல் என்பது உன் காயத்திற்கு நிரந்தரத் தீர்வு.

  அ.கருப்பையா,  பொன்னமராவதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.