ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திரைக் கதிர்

சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நயன்தாரா எவ்வளவு செலவு செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :10 அக்டோபர் 2020, 5:33 pm

தினமணி

சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நயன்தாரா எவ்வளவு செலவு செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  ஒரு நாளைக்கு மட்டும் கோவா நட்சத்திர விடுதியில் நயன்தாரா செலவு செய்த தொகை ரூ.25 லட்சம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

இந்த கரோனோ காலத்தில் மாலத் தீவில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகை மந்திரா பேடி. 48 வயதைக் கடந்திருக்கும் மந்திரா பேடி இத்தனை வயதிலும் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தமிழில்  "சாட்டை', "மகாமுனி' உள்ளிட்ட வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் மகிமா நம்பியார். நல்ல கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்த இவர், தற்போது ஹாலிவுட் அளவுக்கு போட்டோ ஷூட்  நடத்தி, புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை வடிவுக்கரசி. இவர் தற்போது, "கரோனா' விழிப்புணர்வு படத்தில், மீன் வியாபாரியாக நடித்துள்ளார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தான் கடற்கரையில் கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகின்றது.

"கும்கி' படத்தில் இணைந்து நடித்திருந்த விக்ரம் பிரபு - லட்சுமி மேனன் ஜோடி, பிரபல இயக்குநரின் படம் மூலம் மீண்டும் இணைய உள்ளனர்.

ஓடிடி தளமே தற்போதைய மாற்று என்றிருந்த நிலையில், அதிலும் பெரும் அடி விழுந்துள்ளது. ஓடிடி யில் வெளியான அதே நேரத்தில் மாதவன், அனுஷ்கா நடித்த "நிசப்தம்' படம் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது. இதனால்  தயாரிப்பு தரப்பு மிகுந்த சோகத்தில் உள்ளது.

சுமார் 30 வருடங்களுக்குப்  பின் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் நடிகை அமலா. தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த போதே திருமணம், இல்லறம்  என சினிமாவில் இருந்து ஒதுங்கினார். இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.