பேல்பூரி
வாழ்க்கை ஒரு கிரிக்கெட் மேட்ச் மாதிரி...நாம் ரன் எடுக்க ஒருவர்தான் உதவுவார்.ஆனால் 11 பேர் தடுப்பார்கள்.


(மதுரை சக்கிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் )
முற்றுப்புள்ளி கூடமூன்று முறை வைத்தால் தொடர்ச்சி ஆகிவிடும்.
முயற்சித்து கொண்டே இருங்கள்...
வாழ்க்கை வளர்ச்சி ஆகிவிடும்.
ந. பிரபுராஜா,
மதுரை.
( ஒரு வாகனத்தில்கண்ட வாசகம்)
பிச்சை எடுத்தாவது படி
-ஏ.எம்.ஷெரீப்,
புதுக்கோட்டை.
(திருச்செங்கோடு அருகே ஊர் ஒன்றின் பெயர்)
கோழிக்கால் நத்தம்
வெ.கார்த்திக்,
புத்தூர்.
(ஈரோடு அருகே ஒரு லாரியில்)
சைக்கிள்களின் வாழ்வுதனை பைக்குகள் கவ்வும்.
பெட்ரோல் விலையால், மீண்டும் சைக்கிள்களே வெல்லும்.
த.வேல்முருகன்,
ஈரோடு.
(தஞ்சாவூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் டோக்கன் கொடுப்பவரும் நோயாளியும்)
""அஞ்சலை... யாரும்மா அஞ்சலை?''
"" நான்தான்ம்மா அஞ்சலை''
"" நீ உண்மையிலே எதுக்கும்,யாருக்குமே அஞ்சமாட்டீயாம்மா... மாஸ்க்கை மாட்டுமா.''
தே. ராஜாசிங் ஜெயக்குமார்,
தஞ்சாவூர்- 5.
(தஞ்சை நகரப் பேருந்தில்கண்டக்டரும் பெண் பயணியும்)
""அம்மா நீங்க டிக்கெட் வாங்காம ஃப்ரீயா போகலாம்.ஊதா கலர் ஜீன்ஸ் போட்ட உங்க பையனுக்கு மட்டும் டிக்கெட் எடுக்கணும்''
""அது பையனில்லை... என் பெண்தான்''
மு.தாஜுதீன்,
தஞ்சாவூர் -5
நல்ல தம்பதியர் என்பவர்கள் யாரென்றால்,
"அவரைத் திருத்த முடியாது' என்பதை உணர்ந்த மனைவியும்,
"இவ கிட்ட பேச முடியாது' என்பதைப் புரிந்த கணவனும் சேர்ந்து வாழ்வதே.
சுந்தரி காந்தி,
சென்னை - 56.
மைக்ரோ கதை
""ஹலோ முருகேசன்... எங்க வீட்டு சுவிட்ச் போர்டில் ஒரு சுவிட்ச் மாற்றணும். ஒரு வாரத்துக்கு முன்னால ஒரு எலக்ட்ரீசியன் வந்தார். இருபது ரூபாய்வாங்கிட்டு இதோ வந்திர்றேன்னு சொல்லிட்டுப் போனார். ஆளையே காணோம். வேறு யாராவது ஒரு நல்ல எலக்ட்ரீசியன் இருந்தா வீட்டுக்கு வரச் சொல்லுங்களேன்'' என்றார் கிருஷ்ணன்.
""சரிங்க. எங்க வீட்டுக்கு எலக்ட்ரிகல் வேலை செய்பவரை போன் பண்ணி நாளைக்கே வரச் சொல்றேன்'' என்றார் முருகேசன்.
மறுநாள் எலக்ட்ரீசியன் வருவதற்காகக் காத்திருந்தார் கிருஷ்ணன்.வந்த எலக்ட்ரீசியன் விறுவிறுவென வேலையை முடித்துவிட்டார். அவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்தார் கிருஷ்ணன்.
எலக்ட்ரீசியன் 20 ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார்.
""நூறு ரூபாயை வச்சுக்கங்க. பரவாயில்லை'' என்றார் கிருஷ்ணன்.
""இல்ல சார்... இது உங்களுக்குச் சேர வேண்டிய பணம்தான்'' புரியாமல் பார்த்தார் கிருஷ்ணன்.
""ஒரு வாரத்துக்கு முந்தி உங்ககிட்ட காசு வாங்கிக்கிட்டு வேலை செய்யாமப் போனது என் அண்ணன்தான் சார்... உங்ககிட்ட காசு வாங்கிட்டு வெளியே போனவர் மீது லாரி மோதி ஸ்பாட்லயே செத்துப் போயிட்டார் சார்...'' என்றார் கண்கலங்கியவாறே எலக்ட்ரீசியன்.
கு.அருணாசலம்,
தென்காசி.
வாழ்க்கை ஒரு கிரிக்கெட் மேட்ச் மாதிரி...
நாம் ரன் எடுக்க ஒருவர்தான் உதவுவார்.
ஆனால் 11 பேர் தடுப்பார்கள்.
நெ.இராமன்,
சென்னை-74.
ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை உடனே கண்டுபிடிக்கஐரோப்பிய யூனியன் அமைப்பின் நிதியுதவியின் கீழ்"ஸ்நிஃப்போன் புராஜெக்ட்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.இந்தத் திட்டத்தின் கீழ் வயிற்றில் ஏற்படக் கூடிய புற்றுநோய் விரைவில் கண்டறிவதற்கானஸ்நிஃப்போன் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.
ஒருவர் வெளிவிடும் மூச்சில் கலந்துள்ள வேதிப்பொருள்களின் அளவை வைத்து அவருக்கு புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்பதைஇந்தக் கருவி சொல்லிவிடும்.
இதற்கு நானோ பொருள்களால் உருவாக்கப்பட்ட கெமிக்கல் சென்சார்கள் பயன்படுகின்றன.இந்தக் கருவியின் மூலம் கிடைத்த முடிவுகள்பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
கருவியைப் பயன்படுத்தியவரின் ஸ்மார்ட் போனிலிருந்து ப்ளூடூத் வழியாக, மூச்சுக் காற்றைப் பரிசீலனை செய்யும் நிறுவனங்களுக்கும் இந்த முடிவுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் இந்தக் கருவி இணையதளத் தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்கிறது.
நோயாளியின் வயது,ஆணா, பெண்ணா என்ற தகவல், உடல் எடை போன்றதகவல்களுடன்,இந்தக் கருவி அனுப்பித் தந்த முடிவுகளையும் ஒரு மருத்துவர் தொலைதூரத்திலிருந்தே தெரிந்து கொள்ள இந்த இணையதளத் தொடர்பு உதவுகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டஒருவர் ஒரு நாளில் எத்தனைமுறை வேண்டுமானாலும் இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ள முடியும்.புற்றுநோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்யும்போது,இந்தக் கருவியின் மூலம்உடனுக்குடன் கிடைக்கும் தகவல்கள் மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாகஇருக்கின்றன.
என்.ஜே.,
சென்னை-58.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...