47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திரைக்கதிர் 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் "விக்ரம்'.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2021, 12:30 am

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் "விக்ரம்'. கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. "விக்ரம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

----------------------------------------------

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்புக்கு நயன்தாரா செல்லும்போது திடீரென ரசிகர்கள் கூட்டம், அவர் தங்கியிருந்த ஹோட்டல் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் ஏறிச் செல்ல முடியாமல் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி இருக்கிறார். இதையடுத்து நயன்தாராவின் பாதுகாவலர்கள் அவரைப் பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். இந்த விடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

----------------------------------------------

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடந்த 2017-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, அதற்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா சமீபத்தில் கோவாவில் ஒரு பெரிய இடத்தை வாங்கி, அங்கு ஒரு நவீன பண்ணை வீட்டைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த புதிய வீட்டில் கிரகபிரவேசம் 2022-இன் மத்தியில் நடக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். 

----------------------------------------------

நடிகை சன்னி லியோன் இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் நடிகையாக விளங்குகிறார். தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 40 வயதை எட்டிய சன்னி லியோன் இப்போதும் இளமையாக இருக்கிறார். இவர் மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார்.  இளமையாக இருப்பதற்கான ரகசியம் குறித்து சமீபத்தில் விளக்கிய சன்னி லியோன், உடற்பயிற்சி செய்வது, குறைவான கலோரி உணவுகளைச் சாப்பிடுவது என்றார். தான் உடற்பயிற்சி செய்யும் விடியோ ஒன்றையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

----------------------------------------------

தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறியுள்ள ஸ்ருதிஹாசன், "சலார்' படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். நடிப்பு, நடனம், பாடகி என பன்முகத் திறமைகொண்டு சினிமாவில் பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். இந்நிலையில் மும்பையில் வசித்து வரும் ஸ்ருதி, அங்கு முறையாக பாக்சிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து பயிற்சியாளருடன் வெறித்தனமாக பயிற்சி செய்யும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.