திரைக் கதிர்

முழு மூச்சாக படப்பிடிப்புகளில் வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கிறார் சிலம்பரசன்.
திரைக் கதிர்
Updated on
1 min read

முழு மூச்சாக படப்பிடிப்புகளில் வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கிறார் சிலம்பரசன். "ஈஸ்வரன்' படத்தை அடுத்து "மாநாடு' படப்பிடிப்பில் அவர் காட்டும் வேகம் படக்குழுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே வேகத்தில் பயணித்தால், சிலம்பரசன் ஆண்டுக்கு மூன்று படங்களை தராளமாகத் தரலாம்
என்கிறது கோலிவுட் வட்டாரம்.

--------------------------------------------------------------------

"அண்ணாத்த' படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்வதற்கு ஒரே விமானத்தில் மீனாவும், குஷ்புவும் பயணம் செய்துள்ளார்கள். "வீரா' படத்திற்குப் பின் மீனாவும், "பாண்டியன்' படத்திற்குப் பின் குஷ்புவும் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

--------------------------------------------------------------------


"பிசாசு-2' பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அதே போன்ற கெட்அப்பில் தோற்றமளிக்கும் தனது பாட்டியின் புகைப்படத்தையும் ஒன்றாக வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா. இந்த "பிசாசு-2' பர்ஸ்ட்லுக்கிற்கு பின் ஒரு கதை உள்ளது என்கிறார் ஆண்ட்ரியா.

--------------------------------------------------------------------

"யாவரும் நலம்', "தீராத விளையாட்டு பிள்ளை', "யுத்தம் செய்', "ஆதிபகவன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இவர், இப்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். "நெவர் பேக் டவுன்' படத்தின் நான்காம் பாகமாக உருவாகும் "நெவர் பேக் டவுன் : ரிவால்ட்' என்ற படத்தில் நடிக்கிறார்.

--------------------------------------------------------------------

ந்தியில் "தி பேமிலி மேன்' என்கிற சூப்பர் ஹிட்டான வெப் சீரிசை இயக்கியவர்கள் இரட்டை இயக்குநர்களான ராஜ்- டிகே. தற்போது இவர்கள் இயக்கவுள்ள புதிய வெப் சீரிசில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.

--------------------------------------------------------------------

தொலைக்காட்சி சேனல்களில் இருந்து வந்து சினிமாவில் நாயகிகளான சரண்யா, பிரியா பவானி சங்கர், வாணி போஜன், வித்யா பிரதீப் வரிசையில் இப்போது தர்ஷா குப்தா இணைந்துள்ளார். "ருத்ரதாண்டவம்' என்ற படத்தில் ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

--------------------------------------------------------------------


இயக்குநர் செல்வராகவன் நடிகராக களம் இறங்கியுள்ள படம் "சாணிக்காயிதம்'. இப்படத்தை அருண் மாதேஸ்வன் இயக்குகிறார். இதன் முழு திரைக்கதையையும் படித்து முடித்த செல்வராகவன் வெகுவாக இயக்குநரின் திறமையைப் புகழ்ந்துள்ளாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com