திரைக் கதர்

"சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் "வாடிவாசல்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா.
திரைக் கதர்
Updated on
1 min read


"சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் "வாடிவாசல்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா. இதில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்புதான் முதலில் தொடங்கவுள்ளது.

------------------------------------------------------------

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் படம் "ராதே ஷியாம்'.  இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. இது ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதை. தற்போது ஜார்ஜியாவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். படம் இந்த  ஆண்டு  கடைசியில் வெளியாகிறது. 

------------------------------------------------------------

செல்வராகவன் இயக்கத்தில் குறிப்பிடத் தகுந்த படமாக வெளிவந்தது "ஆயிரத்தில் ஒருவன்'.  இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சு அவ்வப்போது பேசப்பட்டது. இப்போது அது இறுதியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகம் தந்துள்ளார் செல்வராகவன். தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

------------------------------------------------------------

"பீட்ஸா' படத்தின் மூன்றாம் பாகத்தைத் தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு இந்தத் தகவலை சுட்டுரைப்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  "தி மம்மி' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்குகிறார். அஷ்வின், காளி வெங்கட், ரவீனா தாஹா, பவித்ரா மாரிமுத்து, கவுரவ் 
நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

------------------------------------------------------------

தொடர்ந்து தீவிரமாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். ஏற்கெனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "ஜகமே தந்திரம்' வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ்  இயக்கத்தில் "கர்ணன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.  இதையடுத்து கார்த்திக்  நரேன் இயக்கத்தில் நடிக்கிறார்.  இப்படத்தின் கூடுதல் திரைக்கதை, வசனங்களை பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதவுள்ளார்.

------------------------------------------------------------

"துப்பறிவாளன்', "நம்ம வீட்டு பிள்ளை' படங்களில் நடித்தவர்  அனு இமானுவல். தெலுங்கு, தமிழில் உருவாகும் "மகா சமுத்திரம்' எனும் படத்தில் இவரும் ஒரு நாயகியாக இணைந்துள்ளார். மல்டி ஸ்டார் படமான இதில் சர்வானந்த் , சித்தார்த், அதிதிராவ் நடித்துள்ளார்கள்.

------------------------------------------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com