திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திரைக் கதிர்

தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த "கிராக்'  கடந்த வாரம் வெளியானது.  படம் பெரிய வெற்றியைப் பெற்று வசூலை அள்ளி வருகிறது. இதில் ஸ்ருதிஹாசன் 6 வயது மகனுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2021, 2:59 pm

தினமணி

தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த "கிராக்'  கடந்த வாரம் வெளியானது.  படம் பெரிய வெற்றியைப் பெற்று வசூலை அள்ளி வருகிறது. இதில் ஸ்ருதிஹாசன் 6 வயது மகனுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

----------------------------------------------------------------

அஜித்தின் "என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்தவர் அருண் விஜய். இவர் அடுத்து விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார்.  விஜய்யின்  65-ஆவது படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன.  இப்படத்தை நெல்சன் எழுதி இயக்குகிறார். 

----------------------------------------------------------------

"கே ஜி எப்'  படத்தின் இரண்டாம் பாகத்தின் டீஸரில் நடிகர்  யஷ்  இயந்திர துப்பாக்கியின் குழலில் சிகரெட் பற்ற வைத்து புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சிக்கு கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

----------------------------------------------------------------

பவன் கல்யாண், ராம் சரண் இருவரும் அடுத்து தமிழில் நேரடியாகக் கால் பதிக்கவுள்ளனர். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இருவரும் ஒரே நேரத்தில் தமிழில் களம் இறங்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

----------------------------------------------------------------

"மாஸ்டர்'  படத்திற்காக வில் வித்தை பயிற்சி எடுத்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. அதோடு, வில் வித்தை மிகவும் கடினமான விளையாட்டு எனவும் பதிவிட்டுள்ளார்.

----------------------------------------------------------------

படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாட்களில் தனது சினிமா நண்பர்களின் வீடுகளுக்குத் திடீரெனச் செல்வார் விஜய் சேதுபதி. அந்த வகையில் சமீபத்தில் குஷ்பூவின் வீட்டிற்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

----------------------------------------------------------------

"மாநாடு', "பத்து தல' ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் அடுத்தடுத்து பங்கேற்று வருகிறார் சிலம்பரசன்.  "மாநாடு' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.