கரோனா தொற்று: ஒரு நிமிடத்தில் அறியலாம்!
கரோனா தொற்று உலகம் முழுவதும் 2-ஆம் அலை மூலம் மீண்டும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய


கரோனா தொற்று உலகம் முழுவதும் 2-ஆம் அலை மூலம் மீண்டும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய தற்போது RT- PCR என்ற சோதனை முறை உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் சோதனையின் முடிவைத் தெரிந்து கொள்ள, குறைந்தபட்சம் 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது.
இதற்கு மாற்றாக, ஒரே நிமிடத்தில், ஒருவருக்கு கரோனா இருக்கிறதா இல்லையா என்று கண்டறிய பிரத்யேக கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஜெகதீசன்.
இந்த கருவியில், நம் உள்ளங்கையுடன் ஐந்து விரல்களும் பதியும்படி வைத்தால் ஒரு நிமிடத்தில் கரோனா இருக்கிறதா இல்லையா என்ற விவரத்தோடு சேர்த்து பி.பி., உடல் வெப்பநிலை, பல்ஸ், ஹீமோகுளோபின் மற்றும் ரத்தத்தில் உள்ள வெள்ளை, சிவப்பு அணுக்கள், தட்டை அணுக்கள் எவ்வளவு உள்ளன என்பதையும் மிகத் துல்லியமாக கண்டறிந்து கூறிவிடுமாம் இந்தக் கருவி.
இதன் மூலம் சோதனையின் முடிவுக்காக காத்திருக்கும் நேரம் குறைவதோடு, மற்றவருக்கு நோய்தொற்று அதிக அளவில் பரவாமலும் தடுக்க விரைவாகக் கண்டறிய முடியும் .
KJ COVID TRACKER என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி மூலம், ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உதவியோடு இதுவரை அதிகாரப்பூர்வமாக 487 பேருக்கு பரிசோதனை எடுத்துப் பார்த்ததில் இந்த கருவி யாருக்கெல்லாம் பாஸிட்டிவ் எனக் காட்டியதோ, அதே நபர்களுக்கு தப-டஇத சோதனையிலும் பாஸிட்டிவ் எனவும் இதில் நெகடிவ் எனவும் வந்தவர்களுக்கு மற்ற இரு சோதனை முறைகளிலும் நெகட்டிவ் எனவும் ஒரே மாதிரியாக வந்துள்ளதாக மருத்துவர் ஜெகதீசன் கூறுகிறார்.
மருத்துவர் ஜெகதீசனுடன் இணைந்து ஓமந்தூரார் மருத்துவமனையின் டீன் ஜெயந்தி, உள்ளிட்ட 9 மருத்துவர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள் சேர்ந்து முழு வடிவம் கொடுத்துள்ள இந்த கருவியை மத்திய அரசின் ICMR அனுமதி அளித்தால் மட்டுமே பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும்.
இந்நிலையில், இந்த கரோனா கண்டுபிடிப்பு கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் பெற தான் விண்ணப்பிக்கவில்லை எனவும், தமிழக அரசு விரும்பினால், ஒப்புதல் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மருத்துவர்ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வுக்காக செலவிடப்படும் பல கோடி ரூபாய் பணம் வீணாவதும் தடுக்கப்படும். எனவே, இதனை ஐ.சி.எம். ஆருக்கு சுகாதாரத்துறை அனுப்பிவைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...