*18 வருடங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கி நடந்து வருகிறது. ஜுலை மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், அதர்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா காது கேட்காத, வாய் பேச முடியாத மீனவர் ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த படம் பிரபல ஓடிடி தளத்திற்கென்றே தயாராகிறதாம். ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சூர்யா வெளியிடவில்லை.
*விஜய் நடிப்பில் "பீஸ்ட்' வெளியாகியுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தெலுங்கு, தமிழில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். "தளபதி 66' என தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். எஸ்.வி.சி. கிரியேஷன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது.
இந்த படம் குடும்ப சென்டிமெண்ட் படம் என்றும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கில் நேரடி படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
*'வணக்கம் சென்னை', 'காளி' படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி தற்போது 'பேப்பர் ராக்கெட்' என்ற வெப் தொடரை இயக்குகிறார். இந்த தொடரில் காளிதாஸ் ஜெயராமன், தன்யா ரவிச்சந்திரன், கெளரி கிஷன், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண்குமார் இசை அமைத்துள்ளார். ஜீ5 ஒடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.
*'தமிழ் படம் 2', 'நான் சிரித்தால்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். தற்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தமிழில் "வலிமை' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதைத்தொடர்ந்து நிகில் நடிக்க, இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது முன்னணி தெலுங்கு நடிகர் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இது தவிர தற்போது சில தமிழ் படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
* கிச்சா சுதீப் நடித்துள்ள படம் 'விக்ராந்த் ரோணா'. ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் நடித்துள்ள இந்த படத்தை ஜாக் மஞ்சுநாத் தயாரிக்கிறார். அனுப் பண்டாரி இப்படத்தை இயக்கி உள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இந்தப் படம் சூப்பர் ஹீரோ பேண்டசி படமாக உருவாகி உள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் வெளிவருகிறது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை மாதம் 28- ஆம் தேதி வெளியாகிறது.
* ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பாக முருகானந்தம் தயாரிக்கும் படம் 'பிசாசு'. கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய்சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மிஷ்கின் இயக்கி உள்ளார். இந்த படம் தெலுங்கில் 'பிசாச்சி 2' என்ற பெயரில் வெளியாகிறது. படத்தின் தெலங்கானா மற்றும் ஆந்திரபிரதேசம் திரையரங்கு விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷின்
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


