எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிரி... சிரி...

""எதிர்வீட்டுக் காரருக்கு ரொம்ப பண முடை போலிருக்கு....!''"" எப்படி சொல்றீங்க...?''""சைக்ளோன் வருதாம்னு  சொன்னா,  சைக்கிள் லோனா...? எப்ப  சார் வருது?'' ன்னு கேக்கறாரே....!

News image
Updated On :24 ஏப்ரல் 2022, 12:30 am


""எதிர்வீட்டுக் காரருக்கு ரொம்ப பண முடை போலிருக்கு....!''
"" எப்படி சொல்றீங்க...?''
""சைக்ளோன் வருதாம்னு  சொன்னா,  சைக்கிள் லோனா...? எப்ப  சார் வருது?'' ன்னு கேக்கறாரே....!

 ""தலைவர் என்ன தொண்டர்களை "கரோனா  கும்பல்' னு திட்றாரு?''
 ""யாருமே கட்டுப்பட மாட்டேங்கிறாங்களாம்!''

=வி. ரேவதி,
தஞ்சை.  

""வீட்டுல தான் நிம்மதி இல்லை. இப்ப அரசியல்லயும் நிம்மதி போயிடுச்சின்னு தலைவர் புலம்பறாரே, ஏன்?''
""அவரோட மனைவி இப்ப ஊராட்சித் தலைவராயிட்டாங்களாம், அதான்!''

= கே.ஆர். உதயகுமார்,
சென்னை =1.

அவர் : படம் முடிஞ்சு தியேட்டரை விட்டு எல்லாரும் வெளியே வரும் போது சிரிச்சுனே வர்றாங்க அந்த ஆள் மட்டும் ஏன் அழுதுனே வர்றாரு ?
இவர் : அவரு படத்தோட தயாரிப்பாளர்ங்க அதான் .

அவர் : அந்த ஆளுக்கு கடன் கொடுத்தா சுகர் குறைஞ்சுடும் 
இவர் : எப்படி?
அவர் : கடனை திருப்பி கொடுக்க நடையா நடக்க வைப்பாரே!

=தீபிகா சாரதி,  
சென்னை =5


""ஏன் சார் இங்க பஸ் இப்ப வருமா?''
""வந்தாலும் வரும், வராமலும் இருக்கும்.''      
"" அது சரி, நீங்க என்ன வேலையில இருக்கீங்க?''     
"" வானிலை ஆராய்ச்சி இலாகாவுல....''

= எம் அசோக் ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.