

கண்டது
மயிலாடுதுறை ஒரு தனியார் பேருந்தில் எழுதப்பட்ட வாசகம்
""கை வேணும்னா கையை உள்ளே வைங்க''
-பி.பாலாஜி கணேஷ்,
சிதம்பரம்.
குமரி மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயர் "செங்கல்'
-எஸ்.பிரவீன்குமார்,
சென்னை.
(புதுக்கோட்டை- கும்பகோணம் சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
""மினுக்கியூர்''
-கே.சுபாக்கனி,
மேலகிருஷ்ணன்புதூர்.
கேட்டது
(திருச்சியில் ஒரு டூவீலர் மெக்கானிக் கடையில் இருவர் பேசிக் கொண்டது)
""என்னப்பா? ஒரு சின்ன வேலைக்கு வண்டியை விட்டுட்டு, நாளைக்கு எடுத்துக்கச் சொல்றீயே?''
""ஆமாம் சார். உடனே சரி செஞ்சி கொடுத்தா, வேலை சரி இல்லைன்னு வெளியே போய் குறை பேசுவீங்களே..!''
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
(திருநெல்வேலியில் ஒரு வங்கியில் பெண் ஊழியரும், வாடிக்கையாளரும்)
""உங்க போனில் பேங்க் ஆப்ஸ் டவுன்லோடு செய்திட்டேன். எல்லா பணபரிமாற்றமும் இதிலே செய்யலாம். பேங்குக்கு வர வேண்டாம்''
""வங்கிக்கு வராமலேயே பணமும் இதிலேயே எடுத்துக்கலாமா?''
""அதுக்கு மட்டும் வரணும்''
- தீபா, திருநெல்வேலி.
(கடலூர்- தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரையில் இரு இளம்பெண்கள் பேசிக் கொண்டது)
""உன் காதல் என்னடி ஆச்சு?''
""என் காதலைத் தூக்கி குப்பையிலேயே போட்டுட்டேன்டி''
""மக்கும் குப்பையா, மக்காத குப்பையா?''
-அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.
யோசிக்கிறாங்கப்பா!
பாதை இல்லையே என்று கவலைப்படாதே.
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
-நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை.
மைக்ரோ கதை
ஒரு புலி கல்யாணம் பண்ணிகிட்டு வரவேற்பு நிகழ்ச்சியை வைத்தது.
எல்லா விலங்குகளும் விருந்து சாப்பிட்டு, புலி ஜோடியை நான்கு அடி தள்ளி நின்றே வாழ்த்தின. ஆண் புலிக்கு கர்வம் தாங்கவில்லை.
அப்போது, பூனை மட்டும் நேரே புலி ஜோடியை வாழ்த்தியது.
இதனால் ஆண் புலிக்கு ஆத்திரம் வந்து, "" டேய். இத்தனை பேரு தூரமாய் நின்று வாழ்த்தினாங்க! உனக்கு மட்டும் எவ்ளோ தைரியம் இருந்தா, என்கிட்ட வந்து சொல்லுவே?'' என்றது.
அந்தப் பூனை சொன்னது:
"" அடே.. கிறுக்குப் பயலே! நானும் கல்யாணத்துக்கு முன்னாடி புலிதாண்டா!'' என்றது.
உடனே மண மேடையில் இருந்த ஆண் புலி முகம் வாட, அதன் ஜோடியான பெண் புலியின் முகத்தில் சந்தோஷக் கலைதான்.
-சௌ.சரவணன்,
பழைய பேராவூரணி
எஸ்எம்எஸ்
முழு மனதாய் செயல்பட்ட எந்தக் காரியமும் தோல்வி அடைந்ததில்லை.
-ப.சரவணன்,
ஸ்ரீரங்கம்.
அப்படீங்களா!
மனிதர்களின் அன்றாட பணிகளை எளிதாக்க, இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் புகுத்தி, கட்டளைகளைக் கேட்டு இயங்கும் சாதனங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதில் ரோபோ தொழில்நுட்பம்தான் மனித உழைப்புக்குப் பயன்படுத்தப்பட உள்ளதால், முன்னணி நிறுவனங்கள் இதில் ஆய்வுகளை மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை செயல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் பிரபல கைப்பேசி நிறுவனமான ஷாவ்மி, மனித ரோபோவை தயாரித்துள்ளது. இதற்கு முன்பு நாய் போன்ற ரோபோவை உருவாக்கியது. தற்போது சைபர் ஒன் என்று பெயரிப்பட்டுள்ள இந்த மனித ரோபோ 177 செ.மீ. உயரமும், 52 கிலோ எடையும் கொண்டது.
எல்இடி பேனலால் இதன் முகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகத்தை 3டி வடிவில் இந்த ரோபோ காணும்.
21 இணைப்புகளைக் கொண்ட இந்த ரோபோ மனிதர்களின் 45 உணர்வுகளைக் கண்டுபிடிக்கும் திறன் படைத்தது. இதில் புதிய அம்சங்களை ஷாவ்மி தொடர்ந்து புகுத்தி வருகிறது.
உலக முன்னணி கார் நிறுவனமான டெஸ்லாவும் மனித ரோபோ தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகிறது. அதன் வடிவத்தையும் அண்மையில் வெளியிட்டிருந்தது. டெஸ்லாவின் மனித ரோபோவை ஷாவ்மி ரோபோ அசைவில் விஞ்சிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 82 லட்சம் கொண்ட இயந்திர மனிதர்கள் விரைவில் நம்முடன் பழக உள்ளார்கள்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அம்மு அபிராமியின் ஜாக்கி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

அதிர்ஷ்டமில்லாத டேவிட் மில்லர்..! பங்கேற்ற 12 ஐசிசி கோப்பைகளிலும் தோல்வி!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மிதுனம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: ரிஷபம்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

