நகரங்களில் உள்ள வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கான இடம் இருப்பதில்லை. ஆனால் நகரங்களில் வாழ்பவர்களுக்கோ, தோட்டம் அமைப்பதில் ஆர்வம் அதிகம். எனவே இருக்கும் இடத்தில் தோட்டம் அமைக்க உதவும் ஒரு வழி, செங்குத்து தோட்டம் அல்லது சுவர் தோட்டம்.
தரையில் இடம் இல்லாததால், வெயில் படும் சுவரில் செடிகளை வளர்க்கலாம்.
வீட்டில் ஒருநாளில் அதிகம் வெயில் அடிக்கும் சுவரில் செங்குத்துத் தோட்டம் அமைப்பது சிறந்தது. நிழலிலேயே வளரக் கூடிய செடிகளை, வெயில்படும் சுவர்கள் இல்லாத வீட்டில் வைக்கலாம்.
செடிகளுக்குத் தண்ணீர் விடும்முறை கூட , என்ன செடி வளர்க்கிறோமோ அதைப் பொருத்து மாறுபடும். வரிசையாக செடித் தொட்டிகள் உள்ள இடத்தில் செடித் தொட்டிகளுக்கு மேலே நீளவாக்கில் பெரிய தண்ணீர்க் குழாயைப் பொருத்தி, செடித் தொட்டி இருக்கும் இடத்தில் குழாயில் சிறிய ஓட்டை செய்து, செடித் தொட்டியில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் விழுமாறு செய்யலாம்.
செடித் தொட்டி என்பது சதுரமான பிளாஸ்டிக் பெட்டியாக இருக்கலாம். கழுத்துப் பகுதி வெட்டப்பட்ட பிளாஸ்டிக் குடங்களாக இருக்கலாம். ஒரு பக்கம் வெட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களாக இருக்கலாம்.
சுவர்த் தோட்டத்தில் காய்கறி செடிகள், பூச்செடிகள் என எதை வேண்டுமானாலும் அவரவர் விருப்பப்படி வளர்க்கலாம்.
என்.ஜே., சென்னை-58.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைப் பண்பில் அசத்தும் இஷான் கிஷன்..! புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!

சென்னைக்கென தேர்தல் அறிக்கை! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்! | DMK
விரைவில் மகா அவதார் பரசுராம்!
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

