மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மைக்ரோ கதை

என்னங்க நம்ம க்ரீஷ்க்கு ஸ்கூல்ல டெய்லி ஒரு ப்ராஜெக்ட் ஒர்க் பண்ண சொல்லியிருக்காங்க. நீங்க ஆஃபிஸ் முடிஞ்சு வரும் போது ஏ4 பேப்பர் வாங்கி வந்துடுங்க'' என்றாள் சுபா.

News image
Updated On :7 மார்ச் 2022, 8:03 am

தினமணி

"என்னங்க நம்ம க்ரீஷ்க்கு ஸ்கூல்ல டெய்லி ஒரு ப்ராஜெக்ட் ஒர்க் பண்ண சொல்லியிருக்காங்க. நீங்க ஆஃபிஸ் முடிஞ்சு வரும் போது ஏ4 பேப்பர் வாங்கி வந்துடுங்க'' என்றாள் சுபா.
"அதெல்லாம் எதுக்கு விலைக் குடுத்து வாங்கணும்? ஆஃபிஸ்லயிருந்து சுட்டா போச்சு'' என்றான் கணவன் மோகன்.
  மோகன் சொன்னதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டாள் சுபா.
இரண்டு நாள்கள் கழிந்தன. மோகன் சொன்னது மாதிரி அலுவலகத்திலிருந்து வெள்ளைத் தாள்களை எடுத்து வந்துவிட்டான். மகனுக்கு ப்ராஜெக்ட் வேலை செய்வதில் உதவத்  திட்டமிட்டாள் சுபா. 
அப்போது,  ஒரு போன் வந்தது.  க்ரீஷ் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் போனில்.
"க்ரீஷின் அம்மாதானே நீங்க? நாளை காலை நீங்களோ அல்லது க்ரீஷின் அப்பாவோ ஸ்கூலுக்கு கண்டிப்பா வரணும்'' என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் தலைமையாசிரியர். பேச்சில் கோபம் தெரிந்தது.
மறுநாள் க்ரீஷ் பள்ளிக்குப் போகும்போது மோகனும் அவனுடன் பள்ளிக்குச் சென்றான்.
க்ரீஷும் மோகனும்  தலைமையாசிரியரின் அறைக்குச் சென்றார்கள்.  தலைமையாசிரியர் கோபத்துடன் சொன்னார்:
"வகுப்பில்  தினமும் யாராவது ஒரு பையன் அவனுடைய பென்சிலைக் காணோம்னு ரிப்போர்ட்  பண்றான். இன்னைக்குத்தான் பென்சிலை யார் எடுத்ததுன்னு கையும் களவுமா உங்க பையனைப் பிடிச்சோம். ஏன்டா உங்க அப்பாட்ட சொல்லி பென்சில் வாங்க வேண்டியதுதானேன்னு உங்க பையன்ட்ட கேட்டா... அவன் சொல்றான்... "பென்சிலை யார்னாச்சும் காசு கொடுத்து வாங்குவாங்களா... யார்ட்டயாவது சுட்டால் போச்சுங்குறான்... என்ன பிள்ளை வளர்த்து வச்சிருக்கீங்க? தொடர்ந்து இது மாதிரி பண்ணினா டிசி குடுத்து அனுப்பிச்சிடுவோம்''
 தலைமையாசிரியரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு,  தலையைக் குனிந்தவாறே வெளியே வந்தான் மோகன்.
வி.ஜி. ஜெயஸ்ரீ, சென்னை - 21.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.