பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கடிதத்தை  படித்தாயா?

அந்தச் சிறுவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே ஆசிரியரிடம் சண்டை போட்டு பள்ளியை விட்டு நின்று விட்டான்.

Updated On :13 மார்ச் 2022, 6:00 am IST


அந்தச் சிறுவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே ஆசிரியரிடம் சண்டை போட்டு பள்ளியை விட்டு நின்று விட்டான்.

கவலையடைந்த அவனது தாயார் கடிதம் ஒன்று எழுதி அந்தச் சிறுவனிடம் கொடுத்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தன் உறவினரிடம் அனுப்பினார்.

கடிதத்தை படித்த உறவினர், "கடிதத்தை படித்தாயா?' என்று சிறுவனைக் கேட்டார்.

"பிறருக்கு கொடுத்த கடிதங்களை நான் படிப்பதில்லை' என்றான் அந்தச் சிறுவன்.

"படித்துப்பாரு' என்று அவனிடமே கொடுத்தார் அவர்.

"சமுதாயத்தையே திருத்துகிற நீங்கள் என் மகனையும் திருத்தி நல்லபடி கொண்டு வாருங்கள்' என்று எழுதியிருந்தது.

அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சமுதாய மாற்றத்திற்காக எழுதி எழுதிக் குவித்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.