முன்னேறிக்கொண்டிருக்கும் துபையுடன் போட்டிபோடுகிறது சவூதி அரேபியா. அதனால் இந்தியர்களுக்கு பலவித வேலைவாய்ப்புகள் பல மடங்கு அதிகமாகியுள்ளன. இதற்காக, நிலவையும் துபையில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள்!
உலகிலேயே மிகப் பெரிய அளவுகளில் கட்டடமான புர்ஜ் கலிஃபா, மிராக்கிள் பூந்தோட்டம், ஜெயண்ட் வீல், ஸ்பா குளியல் நிலையம், பனிச்சறுக்கு போல பாலைவன மணல் மலையில் சறுக்கி விளையாடுவது, 7 நட்சத்திர விடுதி, மிகப் பெரிய செயற்கைத் தீவு, மிகப் பெரிய தங்க மோதிரம்... என்று புத்தம் புதிய வரவுகள் அண்மைக்காலங்களில் உருவாக்கப்பட்டன.
இந்த வரிசையில் துபையில் புதிதாகச் சேர்ந்திருப்பது "நாளைய அருங்காட்சியகம்'. இதன்முட்டை வடிவ கட்டிய அமைப்பே தனி அழகு. சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட என்றாலும் உலக மக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இந்த 7 அடுக்கு கட்டடத்தில் பல்வேறு தலைப்புகளில் அருங்காட்சியகம் காட்சிப்படுத்தியுள்ளது. அந்த தலைப்புகளை உலக மொழிகள் சிலவற்றில் எழுதிவைத்துள்ளது.
"கலாசாரத்துக்காக', "படைப்பாற்றலுக்காக', "நம் சந்ததிகளுக்காக', "சமத்துவத்துக்காக', "இயற்கைக்காக', "கடவுளுக்காக' ... என்று தலைப்புகளை தமிழில் எழுதி வைத்துள்ளனர்.
துபையின் அபரிமித வளர்ச்சியைக் கண்டு, சவூதி அரேபியாவும் கச்சை கட்டிக் கொண்டு போட்டிக்கு இறங்கியுள்ளது. 828 மீ. உயரமுள்ள "புர்ஜ் கலீபா' கோபுரத்தைவிட 1,600 மீ. உயரமான கோபுரத்தை சவூதி கட்டி வருகிறது. தரையிலிருந்து ஒரு கி.மீ. உயரத்தில் எழுந்து கொண்டிருக்கும் இந்தக் கோபுரம் "ஜெட்டா கோபுரம்' என்று அழைக்கப்படும். புர்ஜ் கலீபாவை வடிவமைத்த கட்டிடக் கலைஞரான அட்ரியன் ஸ்மித்தான் ஜெட்டா கோபுரத்தையும் வடிவமைத்திருக்கிறார்.
"பூமியில் ஒரு நிலா... அந்த நிலா துபையில்..." என்று துபை நாடு அறிவித்துள்ளது.
ஒரு கோடி பேர் தங்கும் வசதிகொண்ட நிலவு வடிவத்தில் ரிசார்ட் ஒன்றை உருவாக்கி, "நிலவில் தங்கினால் எப்படி இருக்குமோ? அந்தச் சூழலை அங்கு தங்குபவர்கள் அனுபவிக்கத் தருவதுதான் இந்த ரிஸார்ட்டின் நோக்கம். இதை நிர்மாணிக்க சுமார் 40,000 கோடி செலவாகுமாம். 2028 -இல் "நிலா ரிசார்ட்' திறக்கப்படும்.
அதோடு துபை நிற்கவில்லை. புர்ஜ் கலீபா கோபுரத்துக்கு மோதிரம் போடுவது போல், பிரமாண்ட வளையத்தையும் நிர்மாணிக்கப் போகிறார்கள். இந்த ராட்சஷ வளையத்தை நான்கு பிரமாண்ட தூண்கள் தாங்கி நிற்கும்.
அடுத்த ஆறு ஆண்டுகளில் துபையின் நிலா ரிசார்ட், புர்ஜ் வளையம், சவூதியின் ஜெட்டா கோபுரம், கோடு நகரம் உலக அளவில் பேசும் பொருளாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டையில் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது!

ரெட்டியாா்பட்டியில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
கோவில்பட்டி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும்: கனிமொழி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


