""அண்ணே ஒரு வாட்டர் பாட்டில் கொடுங்க! சாயங்காலம் காசு தர்றேன்?''
""காலையில கச்சேரியை ஆரம்பிக்கப் போற.. சாயங்காலம் மட்டை ஆயிடுவ, யார்கிட்ட நான் காசு கேட்பேன்''
-பொ.பாலாஜி,
அண்ணாமலைநகர்.
""சர்வர் காபி கேட்டேனே''
""இப்பதானே கொடுத்தேன் சார்''
""நான் வெந்நீர்னு நினைச்சு குடிச்சேன். அதுவா காபி''
-பி.கவிதா,
சிதம்பரம்.
""என்னது! பிறந்த குழந்தை பேசிச்சா! என்னன்னு?''
""தன்னோட ஓ.டி.பி. நம்பர் என்னன்னு கேட்டுது''
-சம்பத்குமாரி,
பொன்மலை.
""மலிவா பிளாட் இருக்கு பார்க்கிறீங்களா?''
""கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க!''
""அதுவரைக்கும் பிளாட் இருக்காதே!''
""பிளாட் இருக்கிற இடம் ஏரியா, குட்டையா மாறுதான்னு கனமழையைப் பார்த்தா தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்க..''
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
""டாக்டர்! அந்த பேஷண்ட் இம்ரூமெண்டே இல்லைன்னு கேட்டுகிட்டே இருக்காரு''
""சரி அப்ப அவரை முதல் மாடிலேயிருந்து நாலாவது மாடிக்கு ஷிப்ட் பண்ணிடுங்க!''
-தீபிகா சாரதி,
சென்னை-5.
""என்னடா சொல்றே! பழனிக்கு மொட்டை போட திருப்பதிக்கு போனீங்களா?''
""ஆமாம். என் தம்பி பழனிக்கு மொட்டை போட போனோம்''
-ச.அரசமதி,
தேனி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டையில் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது!

ரெட்டியாா்பட்டியில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
கோவில்பட்டி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும்: கனிமொழி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


