மஞ்சிமா மோகனோடு, கெளதம் கார்த்திக் திருமணம் கிட்டதட்ட நிச்சயம் ஆகிவிட்டது. பெண் வீட்டில் மற்றும் மணமகன் வீட்டில் இருந்த எதிர்ப்புகளை கொஞ்சமாக சரி செய்து கல்யாணத்திற்கு கெளதம் கார்த்திக் "ஓ கே' வாங்கி விட்டார். இதற்கு கௌதமிற்கு அவரின் அப்பா தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். இன்னும் இந்த அறிவிப்புகள் இறுதிக்கட்டத்திற்கு வருகிற வரைக்கும் பதற்றத்தோடு காதல் ஜோடி காத்திருக்கின்றனர். காதல் ஜெயிக்கட்டும்.
"ஜெயிலர்' படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நெல்சனின் வேகமும் ஒர்க்கிங் ஸ்டைலும், ரஜினியை கவர்ந்துவிட, "எக்ஸலன்ட்' என அவரை பாராட்டியிருக்கிறார் ரஜினி. தவிர படப்பிடிப்பு இடைவேளைகளில் நெல்சனிடம் ரஜினி மனம் விட்டு பேசுவதாகவும் சொல்கிறார்கள். சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டால், செம உற்சாகத்தில் இருக்கிறார் நெல்சன்.
இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் "விடுதலை' படத்தின் ஷூட்டிங், நிறைவடையும் கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. டிசம்பருக்குள் "விடுதலை' படப்பிடிப்புக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சூரி. தவிர, "மதயானைக்கூட்டம்' விக்ரம் சுகுமாரன் இயக்கத்திலும் நடிக்கிறார். அவர் சொன்ன கதை சூரிக்கு மிகவும் பிடித்துப் போய்விட, டிசம்பரில் இருந்து கால்ஷீட் தருகிறேன் என சொல்லியிருக்கிறார் சூரி. அதைப் போல அமீர் இயக்கத்தில் சூரி நடிப்பதாக சொல்லப்பட்ட "இறைவன் மிகப்பெரிவன்' படத்தில் சூரி இல்லையாம்.
வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் தமிழில் தயாரித்திருக்கும் முதல் படம் "சொப்பன சுந்தரி'. ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பின்னனி இசையை விஷால் சந்திரசேகர் கவனித்து கொள்ள "லாக்கப்' படத்தை இயக்கிய எஸ். ஜி. சார்லஸ் இயக்கியிருக்கிறார்.
நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் "ஆயிஷா'. இந்தப் படத்தின் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் பி. கே. ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை இந்தியா மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள். "ஆயிஷா' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஏழு மொழிகளில் தயாராகிறது. இந்த பாடலுக்கு நடிகை மஞ்சு வாரியருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா, துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களின் ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கு மேலும் 2 அமைப்புகள் ஆதரவு

தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவு

அமெரிக்க வரிக் குறைப்பு: இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு 1,200 கோடி டாலா் வரை திரும்பக் கிடைக்க வாய்ப்பு!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள்: என்.டி.எம்.சி. பள்ளிகள் சாதனை
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


