அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

திரைக் கதிர் 

கமல் - கெளதம்  வாசுதேவ்மேனன் கூட்டணியின் "வேட்டையாடு விளையாடு 2' அடுத்தாண்டு துவங்குகிறது. ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 12:02 pm

கமல் - கெளதம்  வாசுதேவ்மேனன் கூட்டணியின் "வேட்டையாடு விளையாடு 2' அடுத்தாண்டு துவங்குகிறது. ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் கதை இதுதான் என ஒரு கதை கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் கமல் டெப்டி கமிஷனர் ராகவனாக இருப்பார். இரண்டாம் பாகத்தில் அவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகி விடுவார். அவரது மனைவியான ஆராதனா (ஜோதிகா) இதில் இறந்துவிடுவதாக கதையை அமைத்து இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற கமலிடம் புது வழக்கு ஒன்று விசாரிக்க வருகிறது. அது என்ன வழக்கு? கமல் விசாரணையில் கண்டுபிடித்தது என்ன? என்பதெல்லாம் மீதிக்கதை.

---------------------------------------------------

எழுத்தாளர் ஜெயமோகனின் "வெண்கடல்' சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள "கைதிகள்' கதை படமாகிறது. அறிமுக இயக்குநர் ரஃபிக் இஸ்மாயில் இயக்கும் இப்படத்தை கமலின் "விக்ரம்' படத்தை தயாரித்த டர்மெரிக் மீடியா, ஆஹா தமிழ் ஒடிடி இரண்டும் இணைந்து தயாரிக்கிறது.  டைட்டில், நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது

---------------------------------------------------

விஜய்யின் மகன் சஞ்சய், இப்போது தீவிரமாக நடிப்புப் பயிற்சியில் இறங்கிவிட்டார். இதற்கு அப்பா விஜய்யின் முழு ஆசீர்வாதமும் உண்டு. முதலில் நடனத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறார். அதற்காக வீட்டிற்கே வந்து பயிற்சி அளிக்கிறார்கள். அப்படிப் பயிற்சி அளிக்கும் நபரிடம் வெளியே இந்தச் செய்தியைக் கசிய விடக்கூடாது என்பதுதான் முதல் நிபந்தனையாம். இதனையடுத்து வசனங்களை உச்சரிக்கும் விதம் பற்றிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்களாம். இன்னும் நான்கு வருடங்களில் அவரைக் களமிறக்க ஏற்பாடு நடக்கிறது. 

---------------------------------------------------

விஜய்யின் "வாரிசு' படத்தில் ஏற்கெனவே ஒரு பெரும் பட்டாளமே நடித்து வருகிறது. அதில் தற்போது எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடித்து வருகிறார். அவரும் விஜய்யும் வரும் காட்சிகளில் கைத்தட்டல் அள்ளும் என்கிறார்கள். இன்னொரு விஷயம், படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் விஜய் ராஜேந்திரன் என்பது புதுச் செய்தி. 

---------------------------------------------------

கல்யாணம் செய்து கொள்ளும்படி ஹன்சிகாவை வலியுறுத்துகிறார் அவரது டாக்டர் தாயார். அவரும் மகளும் கஷ்டப்பட்டு சம்பாதித்தது எல்லாம் சொந்தப்படம் எனத் தயாரித்ததில் பிரச்னையாகியிருக்கிறது. தியேட்டர் ஷேர்கள் எதுவும் ஒரிஜினல் தயாரிப்பாளரான ஹன்சிகாவின் கைகளுக்குப் போய்ச் சேரவில்லையாம். அதனால் இப்போது பிரச்னையின் பிடியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.