எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிரி... சிரி...

''தம்பி.  நில்லு! வாயை ஊது!'''' முதல்ல உங்க மிஷின் நல்லா அனலைஸ் பண்ணுமான்னு பாருங்க சார். அப்புறம் நான் குடிக்காமலே குடிச்சேன்னு காட்டினா? நீங்க தான் அபராதம் கொடுக்கணும்.''

News image
Updated On :15 ஏப்ரல் 2023, 6:30 pm


''தம்பி.  நில்லு! வாயை ஊது!''
''முதல்ல உங்க மிஷின் நல்லா அனலைஸ் பண்ணுமான்னு பாருங்க சார். அப்புறம் நான் குடிக்காமலே குடிச்சேன்னு காட்டினா? நீங்க தான் அபராதம் கொடுக்கணும்.''
'' தம்பி. நீ கிளம்பு.  போலீஸ்கிட்டேயே  ரூல்ஸ் பேசறே!''

-பா. து. பிரகாஷ்,
தஞ்சாவூர். 


''அண்ணே. இந்தப் பக்கம் 108 ஆம்புலன்ஸ் போச்சா?''
''இல்லை. இல்லை. ஒரேயொரு ஆம்புலன்ஸ்தான் போச்சு!''

-மகேஷ் அப்பாசுவாமி, 
பனங்கொட்டான்விளை.


''என்னங்க. தூங்கறப்ப எதுக்கு மாஸ்க் போடறீங்க!''
''பஸ்ல போற மாதிரியும், மார்க்கெட் போகிற மாதிரியும் கனவு வருது. அதான்!''

-அ.செந்தில்குமார்,
சூலூர்.


''என்ன சார். சொல்றீங்க. பஞ்சர் ஓட்ட மாட்டீங்களா?''
''காலையில் முதல் வேலையே பஞ்சர் ஒட்டினா, அன்னிக்கு பஞ்சர் ஒட்டிடும் தம்பி அதான்!''


''டாக்டர். தும்மலா வருது''
''இந்த மருந்தை சாப்பிடுங்க இருமலா மாறிடும்!''

-பி.பரத், 
சிதம்பரம்.


''பொடி இட்லி இருக்கு வேணுமா..?
''வேண்டாம். எனக்கு டஸ்ட் அலர்ஜி இருக்குது!''


''என் மனைவி பண்றது எதுவுமே எனக்கு பிடிக்கலை!''
''பிச்சைக்காரனான எனக்கே பிடிக்கலை சாமி! பாவம் உனக்கு எப்படி சார்... பிடிக்கும்!''


''என் மனைவி எனக்கு வீட்டுல ரொம்ப உதவியா இருப்பா''
''நிஜமாவா?''
''ஆமாம். நான் சமைச்சு வெச்சா அவளேதான் போட்டுன்னு சாப்பிடுவா?''

- தீபிகா சாரதி, 
சென்னை.

''ஐயா.  இந்தத் தெருவில் பரமசிவம் பிள்ளைன்னு யாராவது இருக்காங்களா?''
''பரமசிவம் இருக்காரு..? ஆனால் அவர் பிள்ளை எங்கே இருக்காருன்னு தெரியாது!''

-ப.சோமசுந்தரம்,  
சென்னை-129.

''டாக்டர்.. ஞாபக மறதி ஓவரா இருக்கு. பக்கத்துவீட்டு பெண்களைப் பார்த்து...?''
''நினைச்சு...?''
''பயந்துடறேன் டாக்டர்..!''

-வி.ரேவதி, 
தஞ்சை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.