எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திரைக்கதிர்

ஹாட் ஸ்டார் தயாரிப்பில், சசிகுமார் இயக்கத்தில் உருவாகும் "குற்றப் பரம்பரை' வெப் சீரீஸ் டீம், விரைவில் படப்பிடிப்புக்கு  கிளம்பவிருக்கிறது.

News image
Updated On :15 ஏப்ரல் 2023, 6:30 pm


ஆர்யாவின் கதை வேட்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. முத்தையா இயக்கும் "காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்துக்கு அடுத்தபடியாக யாருக்குத் தேதி கொடுக்கலாம் எனப் பலரிடமும் தீவிரமாகக் கதை கேட்டு வந்தார் ஆர்யா. விஷ்ணு விஷால் நடிப்பில்  "எஃப்.ஐ.ஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் சொன்ன கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப்போக, உடனே ஓகே சொல்லிவிட்டார். பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண், கார்த்தியை வைத்துத் தயாரிக்க இந்தக் கதையைக் கேட்டு வைத்திருந்தார். கார்த்தி பிஸியான நிலையில், ஆர்யா தேதி கிடைக்க, பிரின்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

ஹாட் ஸ்டார் தயாரிப்பில், சசிகுமார் இயக்கத்தில் உருவாகும் "குற்றப் பரம்பரை' வெப் சீரீஸ் டீம், விரைவில் படப்பிடிப்புக்கு  கிளம்பவிருக்கிறது. ஐநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் திரைக்கதையை அழகிய பவுண்டாக்கி சசிகுமார் கொடுத்தவிதம், "ஹாட் ஸ்டார்' நிறுவனத்தை அசத்திவிட்டதாம். "பல கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் படைப்புக்கு இவ்வளவு க்ளியரான திரைக்கதை வரைவு தேவை' எனப் பலருக்குமான முன்னுதாரணமாக சசிகுமாரின் பாணியைச் சொல்கிறது ஹாட் ஸ்டார் நிறுவனம். 

சூர்யாவை வைத்து "எதற்கும் துணிந்தவன்' படத்தை முடித்த பிறகு, இன்னமும் அடுத்த படத்தை அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ். சிவகார்த்திகேயன், கார்த்தியின் தேதிகளுக்காகக் காத்திருந்தவர், அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் விஷால் பக்கம் திரும்பினார். விஷால் ஓகே சொன்னாலும், அடுத்தடுத்து பலவிதமான பஞ்சாயத்துகளில் அவர் சிக்கிவருவதால் அவரோடு இணைகிற திட்டமும் இல்லையாம். "விடுதலை' படத்தில் பெரிய கவனம் பெற்றிருக்கும் சூரி, பாண்டிராஜுக்கு ரொம்பவே விசுவாசமானவராம். அதனால், அவரோடு இணைவதற்குத் தயாராகி வருகிறார் பாண்டிராஜ். 

இந்தியன், முதல்வன், ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகிலும் பிரபலமானார் மனிஷா கொய்ராலா. கடந்த 2002-இல் வெளியான "பாபா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். பாபா படம் வெளியாகி தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில் சமீபத்தில் ரீ ரிலிஸ் செய்யப்பட்ட பாபா படத்தை பார்த்து மகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார் மனிஷா. "தமிழில் கடைசியாக நான் நடித்த மிகப் பெரிய படம் பாபாதான். பாபா படம் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் தோல்வியைச் சந்தித்தது. படத்தின் தோல்வி எனது கேரியரை பாதிக்கும் என்று  நினைத்தேன். அது போலவே நடந்து விட்டது'' என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.