''என்னங்க! காபி குடிக்கற கப்புல கைப்பிடி எந்த சைடில் இருக்கும்?''
''ரைட் சைடில்..''
''இல்லை. அவுட் சைடில்!''
''என்னங்க வெயில்ல வந்து இருக்கீங்க? கொஞ்சம் மோர் குடிங்க?''
''மோர் குடிச்சி, குடிச்சி புளிச்சு போச்சு..!''
''நீங்க குடிக்காட்டியும் புளிச்சுதான் போகும். அதான் ரெண்டு டம்ளர் குடிங்க..?''
எஸ்.வேல்அரவிந்த்,
திண்டுக்கல்.
''என்னம்மா! பசிச்சாலும் இரவு 8 மணிக்கு சாப்பாடு போட மாட்டீயா?''
''சீரியஸா சீரியல் பார்க்கிற நேரத்துல எப்போதும் தொந்தரவு
பண்ணாதீங்க?''
''ஒரு டீ கூட உனக்கு போடத் தெரியலையேடி?''
''நீங்க நல்லா டீ போடுவீங்கன்னு சொல்லிதானே எனக்கு உங்கள கட்டி வெச்சாங்க?''
''என்னங்க. செய்கூலி சேதாரம் கிடையாதுன்னு சொன்னீங்க? இப்ப சேர்த்து போட்டிருக்காங்களே?''
''நான் சொல்லலை. அவங்க விளம்பரம் பண்ணி இருந்தாங்க?''
''விளம்பரம் பார்த்து கடைக்கு கூட்டிட்டு வராதீங்கன்னு உங்களுக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன்!''
''என் அம்மாவுக்கும், என் மனைவிக்கும் ஒரே பிரச்னைக்கு தீர்வுவே கிடைக்கலை!''
''அப்புறம்?''
''பிரச்னை எதுக்குன்னு ஆளுக்கு ஒரு ரிமோட் வாங்கிட்டோம்!''
அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
''மீசை பெரிசா இருந்தா ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வருமுன்னு சொன்னீங்க? ஆனா வழக்கமான சம்பளத்தைவிட ரூ.500 குறைஞ்சிருக்கே!''
''தொந்திக்காக ஆயிரம் ரூபாய் பெனால்டி போட்டுட்டாங்க!''
வி.ரேவதி,
தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைப் பண்பில் அசத்தும் இஷான் கிஷன்..! புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!

சென்னைக்கென தேர்தல் அறிக்கை! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்! | DMK
விரைவில் மகா அவதார் பரசுராம்!
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


