வெள்ளை மாளிகையின் ரகசியங்கள்!

அமெரிக்காவின் முகமாக விளங்கும் வெள்ளை மாளிகையை ஐரிஷ் கட்டடக் கலை நிபுணரான ஜேம்ஸ் ஹோபன் வடிவமைத்தார்.
வெள்ளை மாளிகையின் ரகசியங்கள்!

அமெரிக்காவின் முகமாக விளங்கும் வெள்ளை மாளிகையை ஐரிஷ் கட்டடக் கலை நிபுணரான ஜேம்ஸ் ஹோபன் வடிவமைத்தார். வெளிப்புறத்தில் கட்டடத்தைப் பார்க்கும்போது, அயர்லாந்தில் உள்ள 'டுவின் ஹவுஸ்' எனப்படும் லீன்ஸ்டர் இல்லம் போன்று இருப்பதை உணர முடியும்.

வெள்ளை மாளிகையின் ஒவ்வொரு கட்டடமும் 1792ஆம் ஆண்டு முதல் 1800 வரை அடிமைத் தொழிலாளர்களை கொண்டு கட்டப்பட்டது. அந்தக் காலத்தில், உள்ளூர் முதலாளிகள் பலர், கட்டுமானப் பணிக்கு தங்களது அடிமைத் தொழிலாளர்களை வாடகைக்கு விட்டனர்.

பதினெட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில், 130-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 1901-ஆம் ஆண்டில் தியோடர் ரூஸ்வெல்ட் அதிபராக இருந்தபோது, 'வெள்ளை மாளிகை' என பெயர் சூட்டியனார்.

வெள்ளை மாளிகைக்கு வர்ணம் பூசுவது எளிதான வேலை இல்லை. குறையை மறைக்க முடியாத நிறங்களில் வெள்ளை முக்கியமானது. ஒட்டுமொத்தமாக வெளிப்புறங்களில் இருந்து வரும் பேரழிவில் இருந்து காக்க, பழைய முறையில் அதற்கேற்ப வண்ணம் பூச வேண்டும்.

முதன்முதலில் 1950ஆம் ஆண்டு வெள்ளை மாளிகை புனரமைப்புப் பணிகளின்போது முதல் சுரங்கம் அமைக்கப்பட்டது. மேற்கு, கிழக்கு பகுதிகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ள சுரங்கம் வழியாக 'பாம்ப் ஷெல்டர்' சென்று சேரலாம். கூடுதலாக, 1987-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ரொனால்டு ரீகன், பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக அதிபர் அலுவலகமான ஓவல் அலுவலகத்துக்கு வெளிப்புறம் வரையில் ரகசிய சுரங்கம் அமைத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் வசிக்கும் அதிபர், அதிபரின் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு பல சலுகைகள் உண்டு. ஆனால் வரி செலுத்துவோர் அதிபரின் அனைத்து செலவுகளையும் ஏற்பதில்லை. சமையலறைக் கலைஞர் சம்பளம், மளிகை பொருள்களுக்கான செலவு, டாய்லட் பேப்பர், டூத் பேஸ்ட், குப்பை அள்ளும் காகிதம் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களின் செலவை அதிபரே ஏற்க வேண்டும்.

வெளிச்சம் வர வேண்டுமென்பதற்காக ஏராளமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்கும். புல்லட் புரூப், ஷட்டர்புரூப் உள்ளிட்டவை ஜன்னல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து நேரங்களிலும் ஜன்னல்கள் மூடப்பட்டே இருக்கும்.
மாளிகைக்குள் சில அமானுஷ்ய சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி உள்ளதாம். அதிக பேய் நடமாட்டமுள்ள அறை என ரோஸ் அறையை குறிப்பிடுகின்றனர். கிழக்குப் பகுதியில் சலவை செய்து கொண்டிருந்தபோது, முதல் அதிபரின் மனைவி அபிகெய்ல் ஆடம்ஸ் பேயை பார்த்ததாகவும், டேவிட் பர்ன்ஸ் குரலை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பரந்து விரிந்த பசுமை புல்வெளி, பழமையான தோற்றம் கொண்ட வெள்ளை மாளிகை, திருமணத்துக்கு ஏற்ற இடமாக திகழ்ந்து வருகிறது. தற்போது வரை மாளிகை வளாகத்தில் 18 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. முதன்முதலாக ப்ளூ ரூமில், 1812ஆம் ஆண்டு தாமஸ் டோடு மற்றும் லூசி பெயினே வாஷிங்டன் ஆகியோர் திருமணம் நடந்தது.
அதிபர் பாதுகாப்புக்கு, சீக்ரெட் சர்வீஸ் தான் பொறுப்பு. எனினும், ஒட்டுமொத்த வெள்ளை மாளிகையை பாதுகாக்கும் பொறுப்பில் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்த யுனைடெட் ஸ்டேட்ஸ் பார்க் போலீஸார் உள்ளனர். யுனிபார்ம்டு டிவிசன் என்னும் இந்தப் பிரிவில் 1,300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
செளமியா சுப்ரமணியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com