'என்னங்க! நீங்க போன கல்யாணம் கடைசி நேரத்துல நின்னு போச்சாமே! சொல்லவே இல்லை?'
'அது தெரியாது, எட்டரை மணி முகூர்த்தம். ஏழரை மணிக்கே டிபன் போட்டாங்க நான் சாப்பிட்டதும் கிளம்பி வந்துட்டேன்!'
துடுப்பதி வெங்கண்ணா,
பெருந்துறை.
'ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசமாக தர்றாங்கன்னு வாங்கப் போயி ஏமாந்திட்டங்களா? எப்படிங்க?'
'அது பாம்பு சட்டையாம்!'
- அ.செந்தில்குமார்,
சூலூர்.
'என்னங்க. மழையில உங்க ஆபிஸ் ஏரியா எப்படி சார் இருக்கும்?'
'ஏரியாத்தான் இருக்கும்!'
- கி.வாசுதேவன்
தஞ்சாவூர்.
'உங்க உடம்புதான் நல்லா இருக்குன்னு சொல்றீங்க? அப்புறம் எதுக்கு டாக்டர்கிட்ட போனீங்க?'
'டாக்டரை நலம் விசாரிக்கதான்!'
அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
'மனைவியை மடக்கிப் போடும் கோர்ஸ் ஒண்ணு இருக்காமே?'
'ஆமாம் தலையாட்டும் பயிற்சி கோர்ஸ்!'
கு.அருணாசலம்,
தென்காசி.
'தூக்கத்தில எழுந்து நடக்கிற வியாதி உள்ள நீங்க எப்படி கரெக்டா வீட்டுக்கு திரும்பி வர்றீங்க?'
'செல்போன்ல லொகேஷனை ஆன் பண்ணித்தான்!'
'என்னடி. இந்த குக்கரில் சிறப்பு?'
'விசிலை நாம் விரும்புற பாட்டு மெட்டுல செட் பண்ணிக்கலாம்!'
ப.சோமசுந்தரம்,
கோவிலம்பாக்கம்.
'நான் ஒரு பெரிய ஜோதிடர் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்டி. ஆனா, எங்க அப்பா திரும்பத் திரும்ப சொன்ன விஷயம் என்னை மாத்தி யோசிக்க வச்சிடிச்சு!'
'அப்படி என்னதாங்கச் சொன்னார் உங்க அப்பா?'
' எப்பவுமே அடுத்தவங்களைப் பற்றி பேசக்கூடாது'ன்னு சொல்லுவாரு...!'
'கல்யாணத்துக்கு போயிருந்த இடத்துல சாப்பாடெல்லாம் நல்லா இருந்திச்சா கோபாலு?'
'முதல் பந்தி சூப்பர்; அடுத்த பந்தி, ஓ.கே' மூணாவது பந்தி மோசம்; 4வது பந்தி, நாசம்!'
வி.ரேவதி
தஞ்சை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைப் பண்பில் அசத்தும் இஷான் கிஷன்..! புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!

சென்னைக்கென தேர்தல் அறிக்கை! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்! | DMK
விரைவில் மகா அவதார் பரசுராம்!
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


