அப்படீங்களா!

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ,) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி வந்தாலும், பல்வேறு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தொடர்ந்து பணி இழந்து வருவதற்கு காரணம்.
அப்படீங்களா!
Published on
Updated on
1 min read

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ,) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி வந்தாலும்,  மென்பொருள் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தொடர்ந்து பணி இழந்து வருவதற்கு காரணம்.
அப்படி 10 துறைகளில் மனிதர்களால் செய்யப்படும் பணிகள் செயற்கை நுண்ணறிவால் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் காணாமல் போகும் என 803 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவின் மூலம் உலக பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
இந்தப் பட்டியலி முதலில் இருப்பது வங்கித் துறை சார்ந்த பணிகள். ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை வந்த பிறகு பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வங்கியில் பணத்தை எண்ணுவதற்கான காசாளர், கிளார்க் பணிகள், தபால் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றுபவர்களுக்கு வேலை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தரவு உள்ளீடு செய்பவர்கள், கணக்காளர், புத்தக வைப்பாளர், அதிகாரிகள், காப்பீட்டாளர்கள், புள்ளியல் துறையினர், தெருயோர வியாபாரிகள், வீடு வீடாகச் சென்று பொருள்களை விற்பவர்கள் ஆகிய பணிகள் இல்லாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனினும், செயற்கை நுண்ணறிவு துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும்  வணிக நுண்ணறிவு ஆய்வு, வேளாண் துறையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை கையாள்வதற்கு அதிக அளவில் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கணினி பயன்பாடு அதிகரிப்பால் பல துறைகளில் பணியாளர்கள் வேலையிழந்திருந்தாலும், கணினி பயன்பாட்டால் பிற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. அதேபோல், அதநவீன செயற்கை நுண்ணறிவால் ஒரு சில துறைகளில் பணிகள் குறைந்தாலும் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றே கூறப்படுகிறது. சூழலுக்கு ஏற்ப திறன்களை அதிகரித்து மாற்றிக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com