பேல் பூரி

'ஏன்டா மச்சி. ஞாயிற்றுக்கிழமைன்னாலே ஓட்டல் சாப்பாடா...?''ஆமாம்டா.. இல்லைன்னா என் பெண்டாட்டி என்னை சமைக்கச் சொல்லிடுவா?'
பேல் பூரி

கண்டது

(கடலூர்- பண்ருட்டி சாலையில் உள்ள ஊரின் பெயர்)

'சன்னியாசிப்பேட்டை'

-சங்கீதசரவணன்,
மயிலாடுதுறை.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரின் பெயர்)

'காட்டுக்கடை'

-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

(நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி இடையே உள்ள ஊரின் பெயர்)

'பறவை'

-ப.விஸ்வநாதன்,
கீரமங்கலம்.

கேட்டது


(திருவள்ளூரில் உள்ள ஓட்டலில் இரு நண்பர்கள் பேசியது)

'ஏன்டா மச்சி. ஞாயிற்றுக்கிழமைன்னாலே ஓட்டல் சாப்பாடா...?'
'ஆமாம்டா.. இல்லைன்னா என் பெண்டாட்டி என்னை சமைக்கச் சொல்லிடுவா?'

-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.

(தஞ்சாவூரில் உள்ள  கல்லூரி ஒன்றின் அருகே இரு மாணவர்கள்...)

'காதலில் அறுசுவையும் இருக்குதுடா மச்சி...'
'ஆமாம்டா. முதலில் இனிக்கும். அப்புறம் படிப்படியாக துவர்க்கும், புளிக்கும்,  கரிக்கும், கசக்கும், கடைசியா உரைக்கும். அதானேடா...'

-கி.வாசுதேவன்,
தஞ்சாவூர்.

(விழுப்புரம் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இரு நண்பர்கள் பேசியது)

'வெயில் காலம் வர்ற போறதை நினைச்சா பயமா இருக்குதுடா..?'
'ஏன்டா.. வெயில் உனக்கு ஒத்துக்காதா...?'
'அது இல்லடா.. என் பெண்டாட்டி மொட்டை மாடியில் வடாம், , வத்தல் போடச் சொல்லி வேலை வாங்குவாள்'

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

யோசிக்கிறாங்கப்பா!

அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க 
பேச்சு குறைந்து விடுகிறது.

-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.


மைக்ரோ கதை


பட்டிமன்றம் ஒன்றில் காரசாரமான விவாதம். 'மனைவியிடம் அடங்குபவன் குடும்பத்தில் ஜெயிப்பான்,  மனைவியிடம் ஜெயிக்கப் பார்ப்பவன் காட்டுமிராண்டி ...' என்றெல்லாம் பேச்சாளர் பேசிக் கொண்டே சென்றார். கூட்டத்தில் இருந்தோர் பலத்த கைத்தட்டல்கள்.

பட்டிமன்றம் முடிந்து, வீட்டுக்குச் சென்ற பேச்சாளர் தனது மனைவியிடம், 'என்ன செஞ்சு வச்சிருக்கே..' என்றார். 'நீங்க வந்ததும் சூடாக செஞ்சித் தரணும்னு இருக்கேன். என்ன வேணும்னு சொல்லுங்க..' என்றாள் மனைவி. 

'பசியோட வந்திருக்கேன். ஏதாவது செய்துத் தொலை' என்று பேச்சாளர் கோபத்தோடு தனது கையில் கிடைத்த பாத்திரத்தை எடுத்து வீசினார். அது வெளியே சென்று விழுந்தது.  அக்கம்பக்கத்தினரும் சண்டையை கேட்டவாறு..?

-பி.ஜெகநாதன்,
கோவில்பட்டி.

எஸ்எம்எஸ்


வாழ்க்கையில் எதிரி தேவை. 
அவர்தான் விஸ்வரூப வளர்ச்சி சிகரத்தை தொட வைப்பார்.

-இரா.தில்லைசீனிவாசன்,
சிதம்பரம்.

அப்படீங்களா!

எந்த ஒரு தொழில்நுட்பச் சாதனமாக இருந்தாலும் அதற்கு உயிர்நாடியாக இருப்பது பேட்டரிகள்தான். அதுவும் கைப்பேசிகளில்  அதிக நேரம் மின்சக்தியைச் சேமித்து வைக்கும் பேட்டரிகள் அடங்கிய சாதனத்துக்கு ஏற்ப விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. 
கைப்பேசிகளில் ஒரு நாள் முழுவதும் மின்சக்தியை சேமிப்பது பெரும் சவாலாக இருந்தது. தற்போது அதிகபட்சமாக ஒரு வாரம் வரையில் தேவைக்கு ஏற்பட சேமித்து வைத்துகொள்ளும் வகையிலான கைப்பேசிகள் வந்துள்ளன.  இதையும் மீறி தனியாக மின்சக்தியைச் சேமித்து வைத்துகொள்ள பவர் பேங்குகளும் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் சில நாள்களுக்கு மட்டுமே. 
இந்தநிலையில், சீனாவில் அணுசக்தி பயன்பாட்டுடன் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் பேட்டரியை 'பீட்டாவோல்ட்' எனும் நிறுவனம்  கண்டுபிடித்துள்ளது. அணுசக்தி என்பதால் இதன் அளவும் பெரிதாக இருக்கும் என்று கருத வேண்டாம். நாணையத்தைவிட சிறிதாகும். இந்த சிறிய அளவிலான அணுசக்தி பேட்டரி 100 மைக்ரோ வாட் மின்சாரத்தை வழங்க முடியும்.
இந்தச் சாதனத்தில் உள்ள அணுசக்தி கதிர்கள் அபாயத்தை ஏற்படுத்தாது என்பதால் இதனை பேஸ்மேக்கர் போன்ற மருத்துவச் சாதனங்களில் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை அணுசக்தி பேட்டரிகளால் உலகம் முழுவதும் ஏற்படும் பயன்பாட்டு பேட்டரி குப்பைகள் வருங்காலத்தில் குறையும் என எதிர்பார்க்கலாம்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com