திரைக் கதிர்

விஜய் நடிக்கும் 'கோட்' படத்தின் பாடல்கள் இணையத்தில் முதலிடம் பிடித்தன
திரைக் கதிர்
Ganesh

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து எழுதி வெளிவந்துள்ள இரு பாடல்கள் ஒரே நேரத்தில் இணைய தளத்தில் அகில இந்திய வரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கிறது. விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் இடம் பெற்றுள்ள "சின்ன சின்ன கண்கள்..' என்ற பாடல் வெளியாகியுள்ளது. பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது.

நடிகர் விஜயும் பவதாரணியும் பாடிய இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் இதமான பாடல் என்று இசை ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். ஷங்கரின் "இந்தியன் 2' படத்தில் இருந்து "காலண்டர் சாங்...' பாடல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

-------------------------------------------------------------------------------------------

ரஜினியின் "வேட்டையன்' படம் தயாராகி வருகிறது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன் எனப் பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது.

இது அக்டோபர் மாதம் வெளியாகிறதென இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா முன்பே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், ரீலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் ஒரு வேளை அக்டோபர் 10-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது அதே தேதியில் சூர்யா நடித்திருக்கும் "கங்குவா' திரைப்படம் வெளியாகிறது எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

-------------------------------------------------------------------------------------------

"எந்திரன்' திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது. இந்தியன் தாத்தாவையும், முதல்வன் புகழேந்தியையும், சிவாஜியையும் ஒரே திரைப்படத்தில் கொண்டு வந்தால் எப்படி இருக்குமென யோசித்து என்னுடைய இணை இயக்குநர்களிடம் கேட்டேன். அவர்கள் அதற்குச் சரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லை.

அதனால் அந்த ஐடியாவையும் நான் அதன் பிறகு கைவிட்டுவிட்டேன். அதன் பிறகு கொஞ்ச நாள்கள் கழித்துத்தான் "அவெஞ்சர்ஸ்' திரைப்படத்தைப் பார்த்தேன். ஒரு ஐடியா தோன்றிவிட்டால் அதனை உடனடியாக செய்துவிட வேண்டும்' எனக் கூறியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

-------------------------------------------------------------------------------------------

"காஞ்சனா' பாகங்களுக்குப் பின்னர் டைரக்ஷனுக்கு பிரேக் கொடுத்துவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் ராகவா லாரன்ஸ். சத்யஜோதி தயாரிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் 'ஹண்டர்' என்ற படத்தில் கமிட் ஆனார். விஷாலை வைத்து 'அயோக்யா'வை கொடுத்த இயக்குநர் இவர்.

இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் "ரெமோ', கார்த்தியின் "சுல்தான்' படங்களின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணனின் டைரக்ஷனில் "பென்ஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் கதையை எழுதி, தயாரித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com