ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திரைக் கதிர்

கமல்ஹாசனுடன் இந்தியன் 2 குறித்து மனிஷா கொய்ராலா உரையாடல்

News image
Updated On :14 ஜூலை 2024, 11:41 am

DIN

இந்தியன் 2 வெளியாகியுள்ள நிலையில் கமல்ஹாசனைச் சந்தித்துப் பேசியுள்ள மனிஷா கொய்ராலா, 'சிறந்த நடிகரும், அறிவுக் கூர்மை கொண்டவரான கமல் சாருடன் இந்தியன் முதல் பாகத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். இருவரும் இந்தியன் முதல் பாகத்தில் ஜோடியாக நடித்திருந்தோம். புத்தகமும் திரைப்படமும்தான் கமலின் உலகம். மனதையும், ஆன்மாவைச் சீர்படுத்தும் சிறந்த புத்தகங்களை அவர் எனக்குப் பரிந்துரை செய்தார். எப்போது சந்தித்தாலும் நான் அவரைப் பார்த்து வியந்துகொண்டேதான் இருக்கிறேன். நீண்ட நேரம் சினிமா, புத்தகங்கள் பற்றி அவருடன் உரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. இந்தச் சந்திப்பிற்கு மிகுந்த நன்றிகள் கமல் சார்' என்று பதிவிட்டுள்ளார்.

-----------------------------------------------------------------------------------------

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோர் நடித்த 'சூரரைப் போற்று' படத்திற்குப் பாராட்டுகள் குவிந்தன. இந்தப் படத்திற்காக சுதா கொங்கரா, சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்வதாக அறிவிப்பு வந்தது. தற்போது அந்தப் படம் ரிலீஸாகியுள்ளது. 'சர்ஃபிரா' என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் கடந்த 12-ஆம் தேதி வெளியானது. இதில் சூர்யா ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது, அதில் சர்ப்ரைஸாக இருந்தவர் சரத்குமார். தமிழில் மோகன் பாபு நடித்த கேரக்டரில் ஹிந்தியில் சரத்குமார் நடித்திருக்கிறார் எனத் தெரிந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழியில் நடித்துள்ள சரத்குமாருக்கு இதுதான் முதல் பாலிவுட் படம்.

-----------------------------------------------------------------------------------------


கமலின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவா. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. இந்தப் படத்தில் சிவாவின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். பிற மாநிலங்களில் உள்ள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள், காஷ்மீரி வீரர்கள், 'விஸ்வரூபம்' வில்லன் ராகுல் போஸ், புவன் அரோரா எனப் பலரும் நடித்துள்ளனர். மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. சில மாதங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்தப் படத்தின் சிங்கிள் லிரிக் வீடியோ வெளியாகக் காத்திருக்கிறது.

-----------------------------------------------------------------------------------------


சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இருப்பதாக ஷங்கர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசியிருக்கும் ஷங்கர், 'ரோபோ (எந்திரன்) படத்திற்குப் பிறகு வேறு சில படங்களுக்காக ஷாருக் கானை ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். ஆனால் அது எதுவும் சரியாக கைகூடவில்லை. ஆனால் ஷாருக்கானிற்கு பொருத்தமான ஸ்கிரிப்ட் வந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அவரை வைத்து படம் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.