எனக்கு அடிக்கடி சளி தொண்டையில் அடைத்துக் கொள்கிறது. அதைக் கமறிக் கமறி வெளியேற்ற முயற்சிப்பதால், தொண்டையில் புண் ஏற்படுகிறது. காலில் கரப்பான், சொரி, கட்டி, சிரங்கு, வீக்கம், வேறு பாடாய்படுத்துகிறது. இவை குணமாக எளிய கைவைத்தியம் உள்ளதா?
ரமணி, ஈரோடு.
மஞ்சள் தூளைப் பாலில் போட்டு காய்ச்சிச் சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிவு, வயிற்றில் எரிவு நீங்கும். மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்த வென்னீரைக் கொப்பளிக்கத் தொண்டைப் புண் ஆறும். சளி முறிந்து எளிதில் வெளியாகும்.
மஞ்சளை அரைத்து மேல்பூசக் கரப்பான், சொரி சிரங்கால் ஏற்படும் தோல்நிறக் கேடு மாறும். மஞ்சளை விழுதாக அரைத்துச் சுட வைத்துப் பத்துப் போட வீக்கம் குறையும். கட்டி பழுத்து உடையும். அரிசி மாவுடன் சேர்த்துக் களியாகக் கிண்டியோ, சாதத்துடன் சேர்த்து அரைத்தோ அதைக் கட்டிகளின் மேல் போடுவது உண்டு.
வேப்பிலையுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் கொப்புளங்களின் மேல் பூச அவை பழுத்து நீர் வெளியாகி சீக்கிரம் ஆறும். அம்மை கொப்புளங்களுக்கு ஏற்ற பூச்சு சொரி, சிரங்கு, நமைச்சல் அதிகம் இருக்கும்போது, மஞ்சளுடன் ஆடாதோடை இலை சேர்த்துப் பசுவின் சிறுநீர் விட்டு அரைத்துப் பூச நல்லது. சுளுக்கு நரம்புப் பிசகு உள்ள இடங்களில் ஏற்படும் வீக்கத்தையும், வலியையும் குறைக்க இத்துடன் சுண்ணாம்பும் பொட்டிலுப்பும் சேர்த்து அரைத்துப் பூசலாம். பச்சையான பசு மஞ்சளின் சாற்றைப் புதிதாகப் பூச்சிக் கடிபட்ட இடங்களில் தடவ வீக்கம், தடிப்பு, அரிப்பு, நீர்வடிதல் முதலிய காணாக்கடி உபாதைகள் ஏற்படாது.
பால் பெருங்காயம் பொரிக்காதது பத்து கிராம், பச்சைக் கற்பூரம் பத்து கிராம் ஆகிய இரண்டையும் நன்கு அரைத்துப் பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதில், ஒன்றிரண்டு அரிசி எடை தேனில் குழைத்துச் சாப்பிட, தொண்டை மார்பில் உள்ள சளி உடன் இளகி வெளியாகும். குழந்தைகளுக்கு மார்பில் சளி அடைத்து நிலைகுத்தித் திக்குமுக்காடும்போது இது நல்ல குணம் தரும். கை, கால்கள் சில்லிடுவதைத் தடுக்கும்.
வாசனையுடன் கூடிய கார்ப்பும் இனிப்பும் உள்ள சோம்பு விதையை உண்ட களைப்பு நீங்க, வாயில் நீருற்று நிற்க,ஐந்து அல்லது ஆறு என்ற கணக்கில் உணவுக்குப் பிறகு மென்று சாப்பிட நுரைத்த கபத்துடன் காணும் இருமல், தொண்டை சளி குணமாக உதவும்.
இரைப்பை, குடல், கல்லீரல், நுரையீரல், தொண்டை முதலியவற்றில் தடித்த கபப் பூச்சி ஏற்பட்டு கோழை இருந்தால் சுண்டைக்காய் வற்றலை உணவாகச் சமைத்துச் சாப்பிடவும். கைப்புள்ளது. வெப்பத்தை அதிகமாக்கும். நெஞ்சில் தங்கிய கபம், குடலில் தங்கிய கிருமி, பூட்டுகளில் தங்கிய வாயு ஆகியன நீங்கும்.
அதிமதுரக் கட்டையை வாயில் அடக்கிவைத்துக் கொண்டு சிறிது சிறிதாக எச்சல் ஊறலுடன் கலப்பதை விழுங்கி வந்தால், தொண்டை சளி கரையும். இதனுடன் தொண்டையிலுள்ள புண் குணமாகவும் உதவும். இத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலையைப் பொடியாக்கி தேன் குழைத்து காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வரவும். இதனால் உங்கள் உபாதைகள் பெருமளவு குறையும்.
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரில் ரத்தம் வருவதைத் தடுக்க...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் எடை அதிகரிக்க...
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிறு எரிச்சல் குணமாக...
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆழ்ந்த தூக்கத்துக்கு என்ன மருந்து?
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



