ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திரைக்கதிர்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு இணையும் 'தக் லைஃப்' படத்துக்கு எதிர்பார்ப்பு

News image
Updated On :15 ஜூன் 2024, 6:30 pm

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் "தக் லைஃப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். கமலும் அவர் முதன் முறையாக இணைந்து நடிப்பதால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்பு சமீபத்தில் "தக் லைஃப்' படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்தன. இதற்கு அவரது ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

-----------------------------------------------------------------------------------

35 வயதாகும் சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் கைகோர்த்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக, ரசிகர்கள் பலரும் நடிகை சுனைனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதா, காதலர் யார் என்றும் கமென்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தினைப் பகிர்ந்து விரைவில் திருமணம் ஆகவிருப்பதை சுனைனா உறுதிப்படுத்தி இருக்கிறார்."எனக்குக் குறுஞ்செய்திகள் மூலம் வாழ்த்துகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி' என நெகிழ்ந்துள்ளார் சுனைனா.

-----------------------------------------------------------------------------------

சுந்தர் சியின் அரண்மனை 4-ஆம் பாகத்தில் ராஷி கண்ணாவுடன் இணைந்து நடித்திருந்தார் தமன்னா. படப்பிடிப்பின் போது இருவருக்கும் போட்டி நிலவியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா இதுதொடர்பாக பேசியிருக்கிறார்.

-----------------------------------------------------------------------------------

ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடித்தால் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டுப் பேசுவது வழக்கம். சிலர் இரண்டு நடிகைகளுக்கும் போட்டி என்றும் பேசுவார்கள். என்னை பொறுத்தவரை நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன். நானும், ராஷிகண்ணாவும் ஒரு பாடலில் சேர்ந்து நடித்தபோது ஒருவருக்கொருவர் ஆதரவாகத்தான் இருந்தோம். நடிகைகளுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தால் அது நல்ல விஷயம்தான்' என்றார்.

-----------------------------------------------------------------------------------

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது. கமல்ஹாசனை மேடையில் வரவேற்பதற்கு அவரிம் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் மேடையில் உற்சாக நடனம் ஒன்றைக் கொடுத்திருந்தார். இயக்குநர் ஷங்கரின் மகனான அர்ஜித் ஷங்கரும் உற்சாக பாடலுக்காக நடனமாடி பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

மேலும், இந்த விழாவில் இயக்குநர் ஷங்கரை வரவேற்பதற்கு அவரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் மாஸ் பெர்பாமென்ஸ் ஒன்றைக் கொடுத்து இருந்தார். காஜல் அகர்வாலும் நடித்திருக்கிறார். ஆனால், அவருக்கான காட்சிகள் இந்தியன் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில்தான் இடம்பெற்றிருக்கிறதாம். இரண்டாம் பாகத்தில் அவரின் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லையாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.