வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிரி... சிரி...

News image
Updated On :18 மே 2024, 2:24 pm

''என்ன மாமா.. திடீர்னு வந்துட்டீங்க.. இன்னிங்கி எங்க வீட்டில் ரசம் சாதம் மட்டும்தான்..''

''பரவாயில்லைம்மா... சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் பண்ணிடுங்க/''

-பர்வதவர்த்தினி, பம்மல்.



''தலைவர் ஏன் கவலையா இருக்காரு?''

''அவரோட வாக்கு வங்கி 'வீக்' ஆச்சு.. ஆனாலும், 'மீம்ஸ் வங்கி' ஸ்ட்ராங்கா இருக்காம்.. அதான்..''

-பர்வீன் யூனுஸ், சென்னை.



''ஐயோ அமைச்சரே.. போர் முரசு கொட்டும் சத்தம் கேட்குதே?''

''மன்னா.. உங்கப் பயத்துக்கு அளவே இல்லையா? குட்டி இளவரசர் நாம் வாங்கிக் கொடுத்த ;' முரசை கொட்டிக் கொண்டிருக்கிறார்..''

-எஸ்.தேவராஜ், காஞ்சிபுரம்.



''ஏன் ஒரே நாளில் அந்த வீட்டுக்கு இரண்டு முறை திருட போனாய்...''

''முதல் முறை சி.சி. டி.வி. காமிராவை எடுத்து வர.. இரண்டாம் முறையை நகையைத் திருட...''

- மஞ்சுதேவன், பெங்களூரு.



''குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி ஆகிட்டுதான் இருக்கு.. ஆனா எனக்கு ஒரு வளர்ச்சியுமே

இல்லையோ..''

''அவங்க வேலையை பார்க்கிறத மாதிரி நீயும் வேலை பார்க்கணும்.. செல்போனும், நெட்டுமா இருந்தா...?''

-சங்கீதசரவணன், மயிலாடுதுறை.



''மச்சான் எங்க வீட்டில் விருந்தாளிங்க படுத்தற தொல்லை தாங்க முடியலைடா..?''

''நண்பா.. உன் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி சமைக்காம விட வேண்டியதுதானே..''

''அட நீ வேற.. டெய்லி அவங்களே ஆன்லைனில் சாப்பாடு ஆர்டர் போடுறாங்களே..''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.



''உன் மாமியார் கூட தெருவில் நின்னு ஏன் சண்டை பிடிச்சே..?''

''யாருன்னா விடியோ எடுத்து யூ டிபில் போட்டா டிரெண்டா ஆகுமேன்னுதான்..''

-அ.செந்தில்குமார், சூலூர்.

''ஏன்டா.. ஸ்கூலுக்கு புக் எடுத்து வர்றாம செல்போனை எடுத்துன்னு வந்திருக்கே..?''

''இதுல பேஸ் புக் இருக்குது சார்...''



''வெள்ளிக்கிழமை அன்னிக்கு மட்டும் என் மனைவி சைலன்ட் மோடில் இருப்பா..?''

''என்ன சொல்றீங்க/''

''வெள்ளிக்கிழமை அன்னிக்கு என் மனைவி மௌன விரதம் இருப்பான்னு சொன்னேன்..''



''உங்க பையனுக்கு என்ன வேலை..?''

''அவனுக்கு செல்லை தொலைக்கிறதே வேலை..''

-வி.சாரதி டேச்சு, சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.