ஒரே சமயத்தில் நடிப்பு, இயக்கம் என இரண்டு டிராக்கிலும் அதிரடியாகக் கவனம் செலுத்தி வருகிறார்.
தனுஷ். "ராயன்' படத்திற்குப் பின் இரண்டு படங்கள் இயக்கி வருகிறார். ஒன்று "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்', மற்றொன்று "இட்லி கடை'. "குபேரா' படப்பிடிப்பிற்கிடையே மேற்கண்ட இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஜெட் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன.சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் "குபேரா' படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கி வருகிறது.
சிவகார்த்திகேயன்
ரஜினி நடிக்கும் "கூலி' திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. டோலிவுட்டிலிருந்து நாகர்ஜூனா, சாண்டல்வுட்டிலிருந்து உபேந்திரா, மல்லுவுட்டிலிருந்து சௌபின் சாஹிர் எனப் பலரும் நடித்து வருகிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 'கோட்' திரைப்படத்தில் நடித்தது போலவே 'கூலி' படத்திலும் சிவகார்த்திகேயன் கேமியோ செய்கிறார். அவர் 'கூலி' படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றிருக்கிறார் என்ற தகவல்களெல்லாம் பேசப்பட்டு வந்தது. இதை படக்குழு மறுத்துள்ளது.
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியனுக்கும், அவரின் காதலர் லோவல் தவானுக்கும் நவம்பர் 8-ஆம் தேதி நவம்பரில் ரிஷிகேஷியில் திருமணமும், நவம்பர் 15-ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பும் நடைபெறவிருப்பதாகக் கடந்த மாதம் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ரிஷிகேஷியில் சிவபுரி கங்கைக் கரையில் ரம்யா பாண்டியன், லோவல் தவான் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ரம்யா பாண்டியனுக்குத் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
பிரதீப் ரங்கநாதன்
"ஓ மை கடவுளே' திரைப்படத்திற்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படம் "டிராகன்'.
இந்த "டிராகன்' திரைப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என மூன்று இயக்குநர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்களாம். இந்த அறிவிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். மூத்த இயக்குநர்கள் நடிப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...



