இரு நிலா
இரு நிலா

இரு நிலா...?

பூமிக்கு ஒரு சூரியன் போல், நிலவும் ஒன்றுதான்! ஆனால் 'நாஸா' விண்வெளி விஞ்ஞானிகள் கருத்துப்படி, பூமியைச் சுற்ற எப்போதும் இருக்கும் நிலவுடன் சிறிய 'நிலவு' ஒன்று செப்டம்பர் 29-இல் விண்வெளியில் தோன்றியுள்ளது.
Published on

பூமிக்கு ஒரு சூரியன் போல், நிலவும் ஒன்றுதான்! ஆனால் 'நாஸா' விண்வெளி விஞ்ஞானிகள் கருத்துப்படி, பூமியைச் சுற்ற எப்போதும் இருக்கும் நிலவுடன் சிறிய 'நிலவு' ஒன்று செப்டம்பர் 29-இல் விண்வெளியில் தோன்றியுள்ளது. இந்த இரண்டாம் நிலவு 2025 நவம்பர் 25 வரை பூமியைச் சுற்றும்.

இரண்டாம் நிலவுக்கு விஞ்ஞானிகள் '2024 பி.டி.5' என்று பெயர் வைத்துள்ளார்கள். பூமியைச் சுற்றிவரும் பல்வேறு விண்கற்கள், வால் நட்சத்திரம் போன்றவற்றை நாஸா கண்காணித்து வருகிறது. இரண்டாம் நிலாவானது உண்மையில் ஒரு விண்கல் ஆகும். அதன் விட்டம் 37 அடி.

பூமியின் புவி ஈர்ப்பு சக்தியால் இந்த விண்கல், சுற்றுப்பாதைக்கு வந்து பூமியைச் சுற்றிக் கொண்டுள்ளது. பூமியைச் சுற்ற ஏற்கெனவே ஒரு நிலவு இருப்பதால், பூமியைச் சுற்றி வரும் விண்கல்லையும் 'சிறிய நிலா' என்று அழைப்பது மரபாகிவிட்டது.

அர்ஜுனா விண்கல் குடும்பத்தைச் சேர்ந்த 'சிறிய நிலா' பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாலும் உருவம் சிறியதாக இருப்பதாலும் சாதாரண தொலைநோக்கிகளால் கூட பார்க்க முடியாது. மணிக்கு 2 ஆயிரம் மைல் வேகத்தில் இந்த விண்கல் சுற்றிவருகிறது. நவம்பர் 25- க்குப் பிறகு இந்த சிறிய நிலா பூமியின் புவி ஈர்ப்புச் சக்தியிலிருந்து விடுபட்டு அர்ஜுனா விண்கல் குடும்பத்துடன் சேர்ந்துவிடும்.

1981, 2022-ஆம் ஆண்டுகளில் விண்கல் பூமியைச் சுற்றி வந்துள்ளது. அப்போதும் அவை 'இரண்டாம் நிலவு' என்றுதான் அழைக்கப்பட்டன. 'சிறிய நிலா' என்று அழைக்கப்பட்டாலும் நிரந்தர நிலா போல் ஒளியை வழங்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com