உலகப் புகழ் பெற்ற சித்ரலேகா
'சித்ரலேகா' நாவல் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டது. ஹிந்தியில் மட்டும் ஏராளமான பதிப்புகள் வெளிவந்தன.

சித்ரலேகா

சித்ரலேகா
'சித்ரலேகா' நாவல் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டது. ஹிந்தியில் மட்டும் ஏராளமான பதிப்புகள் வெளிவந்தன. "சித்தரலேகா' இரண்டு முறை திரைப்படமாகக் கூட வெளிவந்துள்ளன. இந்த நாவலில் கிடைத்தச் சன்மானத் தொகையில், பகவதி சரண் வர்மா தமக்கென்று பெரிய மாளிகையைக் கட்டி, "சித்ரலேகா' என்ற பெயரையே சூட்டினார்.
லக்னௌவில் "சித்ரலேகா' எங்கு இருக்கிறது என்று கேட்டாலே, மக்கள் பகவதி சரண் வர்மாவின் வீட்டுக்கு வழிகாட்டிவிடுவார்கள். இப்படி எழுத்துலகப் படைப்பாளிகளில் மிகவும் புகழ் பெற்ற இவரது எழுத்துகளில் வற்றாத அழகும், உண்மையும் பளிச்சிடும்.
உத்தரப் பிரதேசத்துக்கு உள்பட்ட லக்னௌவில் வாழ்ந்த பிரபல வழக்குரைஞருக்கு 1903-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-இல் மகனாகப் பிறந்தார் பகவதி சரண் வர்மா.
தந்தையின் பெயரையே கொண்டிருந்தார். இவரும் வழக்குரைஞருக்குப் படித்திருந்தாலும், "சத்தியத்துடன் வாழ முடியாது' என்று அந்தப் பணியை மேற்கொள்ள விரும்பவில்லை.
அவர் வாழ்ந்த காலம் இந்தியாவில் தூய்மையான வேள்விக் குண்டமாக எரிந்துகொண்டிருந்தது. வேள்விச் சாலையை பல பெரியவர்கள் நடத்தினர். அவர் தூய்மையான தேசப் பக்தரான பகவதி சரண் வர்மா, தியாகம் எப்படிப்பட்டது என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தமர்களில் ஒருவர். "தியாகி' என்ற புனிதத் தன்மையைப் பேணி காத்த தியாகப் புருஷர்.
கணேஷ் சங்கர் வித்யார்த்தி நடத்தி வந்த "பிரதாப்' பத்திரிகையில் கட்டுரைகளை பகவதி சரண் வர்மா எழுதிவந்தார். கவிதைகள், சிறுகதைகள், சமூக நாவல்கள், சரித்திர நாவல்களையும் கூட அவர் எழுதினார். "மனித நேயமே அனைத்திலும் உயர்ந்தது' என்பதில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருந்தார் பகவதி சரண் சர்மா.
இலக்கிய உலகில் பகவதி சரண் வர்மாவின் புகழுக்குப் புகழ் சேர்த்து நாவல்கள் பல. "டேமே மேடே ராஸ்தே' (கோணல்மானலான பாதைகள்), "பூலே பிஸரே சித்ர' (மறந்து நலிந்த ஓவியங்கள்) ஆகிய நாவல்கள் பகவதி சரண் வர்மாவை இலக்கிய உலகில் சுடர்விடும் நட்சத்திரங்களாகிவிட்டன.
"பூலே பிஸரே சித்ர' என்ற நாவல் சாகித்ய அகாதெமியின் பரிசையும் பெற்றது. இருந்தாலும், "சித்ரலேகா' என்ற நாவல்தான் பகவதி சரண் வர்மாவை இலக்கிய உலகம் பூரணச் சந்திரனாகப் பிரகாசிக்கும்படி செய்தது.
தேசிய நல்வாழ்வும் ஆனமிக மறுமலர்ச்சியும்தான் அவருடைய லட்சியங்கள். "எழுதுகோல் தெய்வம்! எழுத்தும் தெய்வம்!' என்று வாழ்ந்தவர்களில் அவரும் ஒருவர்.
புண்ணிய பூமியில் மாட்சிகளை கதாபாத்திரங்களாக்கி, அவர்கள் வாயிலாக அறிந்துகொள்ளுமாறு செய்தவர்.
"கல்கி' தனது "கல்கி' வார இதழில், இந்த "சித்ரலேகா' நாவலைத் தொடராக வெளியிட்டார். அதன்பிறகு பகவதி சரண் வர்மா இந்த நாவலில் ஏராளமான திருத்தங்களைச் செய்து, சரித்திரச் சான்றுகளுடன் சேர்த்து நாவலுக்கு மேலும் பெருமைகளைச் சேர்த்தார்.
இலக்கிய உலகில் புகழின் உச்சியில் இருக்கும்போது, 1983-ஆம் ஆண்டில் மறைவுற்றார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர். எந்தவொரு எழுத்தாளரும் இப்படியொரு மதிப்பு, மரியாதையுடன் வாழ்ந்ததில்லை.
இந்திய வரலாற்று ஆசிரியர்களுக்கு "சித்ரலேகா' ஒரு வழிகாட்டி நவீனமாகும். இதில் அதிசயம் என்னவென்றால், கல்லூரியில் படித்துகொண்டிருந்த ஒரு இளைஞன் சித்ர
லேகா நாவலைத் தமிழாக்கம் செய்யும் உரிமையை பகவதி சரண் வர்மாவிடம் பெற்றார். அந்த இளைஞர் பெயர் ரா.வீழிநாதன். பிற்காலத்தில் வடமொழி நூல்களை மொழிபெயர்த்தவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...