மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உலகின் ‘நம்பர் ஒன்’ ஆல்ரவுண்டர் அன்சோல்ட்! பாகிஸ்தான் வம்சாவளி வீரரை வாங்க மறுப்பா?

‘ஹன்ட்ரட் லீக்’ ஏலத்தில் விற்பனையாகாமல் போன உலகில் ‘நம்பர் ஒன்’ டி20 ஆல்ரவுண்டரை பற்றி...

News image

சிக்கந்தர் ராஸா. - படம்: ஏபி.

Updated On :13 மார்ச் 2026, 11:19 am

‘ஹன்ட்ரட் லீக்’ ஏலத்தில் உலகில் ‘நம்பர் ஒன்’ டி20 ஆல்ரவுண்டர் வீரரை யாரும் எடுக்க முன்வராதது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்று டி20 லீக் போட்டிகளுக்கு மாற்றாக நூறு பந்துகளைக் கொண்ட பிரிட்டனை மையமாகக் கொண்டு தி ஹண்ட்ரட் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தொடரில் பர்மிங்காம் பீனிக்ஸ், லண்டன் ஸ்பிரிட், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ், சன்ரைசர்ஸ் லீட்ஸ், ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் வெல்ஷ் ஃபயர் உள்ளிட்ட எட்டு அணிகள் இருக்கின்றன. இதில், நான்கு அணிகளை இந்தியாவை மையமாகக் கொண்டுள்ள ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பங்குகளை வைத்துள்ளனர்.

இந்த ஏலத்தில், 710-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்க விஷயமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா, உஸ்மான் தாரிக், சைம் அயுப், ஷாகீன் ஷா அப்ரிதி, ஷதாப் கான், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, அப்ரார் அகமது மற்றும் இமாத் வாசிம் உள்பட 63 வீரர்கள் ஏலத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இந்தத் தொடரின் வீரர்களுக்கான ஏலம் நேற்று (மார்ச் 12) லண்டனின் பிகாட்லி லைட்ஸில் நடைபெற்றது. இந்தியாவை மையமாகக் கொண்டுள்ள அணி நிர்வாகத்தினர் பாகிஸ்தான் வீரர்களை தங்கள் அணியில் ஒப்பந்தம் செய்யமாட்டார்கள் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இருப்பினும், இந்த ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதை 1.90 லட்சம் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 2.34 கோடி) ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி. அதேபோன்று, மற்ற பாகிஸ்தான் வீரர்கள் உஸ்மான் தாரிக்கை பிர்மிங்காம் போனிக்ஸ் அணி ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால், சதாப் கான், உலகின் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டி20 ஆல்ரவுண்டர் சைம் அயுப், ஹாரிஸ் ரௌஃப், பாகிஸ்தான் பிறந்தவரான ஜிம்பாப்வேயைச் சேர்ந்த நம்பர் ஒன் டி20 ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராஸா உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

பாகிஸ்தான் அப்ரார் அகமதை சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததற்கு இந்திய ரசிகர்கள் பலரும் கொந்தளித்திருக்கும் நிலையில், நம்பர் ஒன் வீரரான சிக்கந்தர் ராஸாவை பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் ஏலத்தில் எடுக்கப்படாமல் போயிருக்கலாம் என்று உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.