
தனி விமானங்கள்
திரையுலகில் பல கோடி ரூபாய்களைச் சம்பளமாக வாங்கும் நடிகர்கள், நடிகைகள் பலர் ஜெட் விமானத்தைச் சொந்தமாக வைத்துள்ளனர்.
அண்மைக்காலமாக அவர்கள் படத்துக்கு விளம்பரப்படுத்தும் விழாக்கள் மட்டுமின்றி, திருமண விழாக்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு தனி விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். சொந்தமாக விமானம் இல்லாத திரையுலகப் பிரமுகர்கள் வாடகைக்கு தனி விமானங்களைப் பயன்படுத்துகின்றனர்.
கோவாவுக்கு அண்மையில் நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு நடிகர் விஜய் தனி விமானத்தில் சென்றிருந்தார். நயன்தாராவும் தனது குடும்பத்துடன் தனி விமானத்திலேயே பெரும்பாலும் பயணிக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகர் மகேஷ்பாபு தனது குடும்பத்துடன் சுற்றுலா, வெளியூர் படப்பிடிப்புக்குச் செல்வதற்காகவே தனி விமானத்தை வைத்துள்ளார்.
'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் வெளியூர் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு வசதியாக, தனி விமானத்தை வைத்துள்ளார்.
நடிகர் நாகார்ஜுனா வைத்துள்ள தனி விமானத்தை அவரது மகன்கள் நாக சைதன்யா, அகில் ஆகியோர் பயன்படுத்துகின்றனர்.
சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான ராம்சரணும் தனி விமானத்தை வைத்திருக்கிறார்.
இதுபோன்று அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., தயாரிப்பாளர் தில்ராஜு உள்பட பலரும் சொந்தமாக ஜெட் விமானங்களை வைத்துள்ளனர்.
ஹிந்தி திரையுலகிலும் பல நடிகர்களுக்குச் சொந்தமாக விமானங்கள் உள்ளன.
தொழிலதிபர்களாகும் நடிகைகள்:
திரையுலகின் முன்னணி நடிகைகள் பலர் ரியல் எஸ்டேட், ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். அந்த வகையில், ஹிந்து திரையுலப் பிரமுகர்கள் பலர் ஓட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் 'ஆரம்பம்' என்ற சிறுதானிய உணவுகள் தயாரித்து வழங்கும் உணவகத்தை ரகுல் பிரித்சிங் தொடங்கியிருக்கிறார்.
பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தற்போது நொய்டாவில் புதிய உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். அவர் பஞ்சாப், ஹைதராபாத், கோவா போன்ற இடங்களிலும் கிளைகளைத் தொடங்கத் திட்டமிட்டுவருகிறார்.
மலைக்கா அரோரா, அவரது மகன் அர்கான்கான் ஆகியோர் மும்பை ஜூகு பகுதியில் நடத்தி வரும் உணவகத்தில் ஆசிய, மத்திய கிழக்கு உணவு வகைகள் விநியோகிக்கப்படுகின்றன.
ஷாருக்கானின் மனைவி கௌரிகான் மும்பை பாந்த்ரா பகுதியில் நடத்தி வரும் உணவகத்தில் ஜப்பானிய உணவு வகைகள், சுஷஷி, பாலாடை, சிக்னேச்சர் காக்கடெய்ல்ஸ், சுராஸ் போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.