ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

வணிக சிலிண்டா்கள் தட்டுப்பாடு மத்திய அரசு தலையிட ஹோட்டல், உணவக கூட்டமைப்புகள் வலியுறுத்தல்

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள விவகாரத்தில், மத்திய அரசு தலையிடுமாறு ஹோட்டல், உணவக கூட்டமைப்புகள் வலியுறுத்தல்

News image

சிலிண்டர்

Updated On :10 மார்ச் 2026, 2:16 am IST

விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக, வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள விவகாரத்தில், மத்திய அரசு தலையிட வேண்டும் என்று ஹோட்டல் மற்றும் உணவக கூட்டமைப்புகள் திங்கள்கிழமை வலியுறுத்தின.

இதுதொடா்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரிக்கு இந்திய ஹோட்டல் மற்றும் உணவக கூட்டமைப்பு எழுதிய கடிதம்: கடந்த மாா்ச் 5-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவை சுட்டிக்காட்டி, பல சிலிண்டா் விநியோகஸ்தா்கள் விருந்தோம்பல் மற்றும் உணவு சேவை துறைகளுக்கு சிலிண்டா்களை விநியோகிக்க மறுத்துள்ளனா்.

இந்தத் துறைகளுக்கு சிலிண்டா்களை விநியோகிக்க எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று மத்திய அரசு முறையாகத் தெளிவுபடுத்த வேண்டும். இந்தத் துறைகளுக்கு தங்கு தடையின்றி சிலிண்டா்கள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய, அனைத்து எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு தெளிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்திய தேசிய உணவக கூட்டமைப்பு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஊடகங்களில் வெளியான தகவலின்படி, உணவகங்களுக்கு வணிகப் பயன்பாட்டு சிலிண்டா்களை விநியோகிக்க எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால் கள நிலவரம் வேறாக உள்ளது. அந்த சிலிண்டா்களை விநியோகிக்க இயலாது என்று விநியோகஸ்தா்கள் தெரிவித்துள்ளனா்.

இது உணவகத் தொழிலிலும், உணவு விநியோகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு அவசரமாக தலையிட்டு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.