கொடி பறக்குது..!

உலகில் 195 நாடுகள் தேசியக் கொடிகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியக் கொடியானது மூவர்ணக் கொடி.
கொடி பறக்குது..!
Published on
Updated on
1 min read

உலகில் 195 நாடுகள் தேசியக் கொடிகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியக் கொடியானது மூவர்ணக் கொடி. பத்து நாடுகளின் கொடிகள் கரும்பச்சை, சந்திரன், நட்சத்திரங்களைக் கொண்டுள்ளன. பண்டைய நம்பிக்கை, புராண நம்பிக்கைகளில் வேரூன்றிய இறைநம்பிக்கைகளாலேயே இவை உருவாக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான்

பிறை, நட்சத்திரம் கொண்டது. கரும்பச்சை நிற பின்னணியில் ஒரு வெள்ளை நட்சத்திரமும், பிறையும்,ஏணியின் செங்குத்தான வெள்ளைக் கோடும் கொண்டது. பச்சை முஸ்லிமையும், முன்னேற்றம், அறிவை பிறை நட்சத்திரமும்,வெள்ளைக்கோடு சிறுபான்மையையும் குறிக்கும். ஒற்றுமையையும் நம்பிக்கையையும் ஸ்தாபகக் கொள்கையாகக் கொண்டுள்ளது.

துருக்கி

சிவப்புப் பின்னணியில் வெள்ளைப் பிறை நட்சத்திரத்தைக் கொண்டது. சிவப்பு, ஒட்டோமன் வீரம். பிறை மதத்துக்கு அப்பாற்பட்ட கலாசார அடையாளத்தை எழுப்புகிறது.

மலேசியா

மஞ்சள் நிற பிறை, மஞ்சள் நிறத்தில் 14 முனைகள் கொண்ட நட்சத்திரம். சுற்றிலும் ஏழு சிவப்பு நிற பட்டைக்கோடுகள். இவை இஸ்லாம், மாநிலங்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது.

அல்ஜீரியா

பச்சை, வெள்ளை சூழப்பட்ட சிவப்புப் பிறைச் சந்திரன் கொண்டது. இஸ்லாம், அமைதி , காலனி ஆதிக்கங்களின்போது பட்ட கஷ்டங்களை பிரதிபலிக்கிறது.

துனுசியா

சிவப்பு நிறத்தில் செவ்வக வடிவில் உள்ளது. வெள்ளை வட்டத்துக்குள் ஒரு சிவப்புப் பிறையும் அதைச் சுற்றி ஐந்து முனைகளைக் கொண்ட சிவப்பு நட்சத்திரமும் உள்ளது.

மவுரித்தேனியா

தங்க நட்சத்திரம், பிறையைக் கொண்ட பச்சை பின்னணி. மேலும் கீழும் இரண்டு சிவப்புக் கோடுகள் உள்ளன.

துர்க் மெனிஸ்தான்

பச்சை நிற பின்னணியில் மேல் இடப்புறத்தில் செங்குத்தான ஒரு சிவப்புப் பட்டை, ஐந்து தரைவிரிப்புகள். அதன் மேலே ஒரு பிறை, ஐந்து நட்சத்திரங்கள் உள்ளன. சிவப்புப் பட்டை நாட்டின் பாரம்பரியத்தையும், கம்பளி தொழிலின் முக்கியத்துவத்தையும், நாட்டின் முக்கிய ஐந்து பிராந்தியங்களின் தனித்துவமான கலாசாரத்தையும் காட்டுகிறது. பிறை, ஐந்து நட்சத்திரங்கள் இஸ்லாத்தின் ஐந்து தூண்களையும் நாட்டின் ஒற்றுமை, எதிர்காலத்தையும் பிரதிபலிக்கிறது.

சிங்கப்பூர்

வெள்ளை நிறத்துக்கு மேலே சிவப்பு நிறத்தின் கிடைமட்ட இரு வண்ணங்களும் பிறை, ஐந்து நட்சத்திரங்கள் நாட்டின் லட்சியங்களையும் இஸ்லாத்தின் ஐந்து தூண்களையும் காட்டுகிறது. உலகளாவிய சகோதரத்துவம், சமத்துவம், கொடியின் முக்கிய கொள்கை.

அஜர்பைஜான்

மூன்று கிடைமட்டத்தில் அமைந்த நீலம், சிவப்பு, பச்சை. கொடியின் நடுவில் ஒரு வெள்ளைப் பிறை, நட்சத்திரம். நீலம் அஜர் பைஜான் மக்களின் பாரம்பரிய நிறம். சிவப்பு நவீன சமுதாயத்தை உருவாக்குவதையும், சுதந்திர, முன்னேற்றம் சார்ந்த போராட்டங்களை நிலை நிறுத்துவதையும் குறிக்கும். சந்திரன், நட்சத்திரம் இஸ்லாமின் சின்னம்.

கொமொரோஸ்

நான்கு கிடைமட்ட கோடுகள். மஞ்சள், வெள்ளை, சிவப்பு, நீல நிறங்களைக் கொண்ட பட்டைகள். இடது புறத்தில் ஒரு பச்சை முக்கோணம். அதில் ஒரு வெள்ளைப் பிறையும், நான்கு வெள்ளை நட்சத்திரங்களையும் கொண்டது. நான்கு முக்கிய தீவுகள் நாலு வண்ணங்கள். இஸ்லாம் மதம், இஸ்லாமிய சின்னங்களை மற்றவை பிரதிபலிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com