'என்னங்க.. ஆபிஸில் சிரிச்சதுக்காக உங்களுக்கு மெமோ கொடுத்துட்டாங்க?'
'ஆமாம்.. தூக்கத்துல சிரிச்சிட்டேன்.'
- தீபிகா சாரதி, சென்னை-5.
'சார்.. என் மனைவியை ஒருத்தன் கடத்திக் கொண்டு போயிட்டான்...'
'அப்படியா? முதலில் உங்க மனைவியைக் காப்பாத்தணும்.. அதுதான் முக்கியம்...'
'இல்லை சார்.. அவனை பழிவாங்கணும்னா என் மனைவியை மீட்காமலே விட்டுட்றதுதான் ஒரேவழி...'
-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
'இந்தாங்க இந்த மாச கரண்ட் பில்...'
'இது எதுக்கு என்கிட்டே கொடுக்கிறே...'
'நீங்க வந்தவுடன்தான் என் வாழ்க்கை ஒளிமயமானது.. அதான்...'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'என்னங்க... வீட்டில் பெருச்சாளி ஓடவே மாட்டங்குது..'
'விரட்ட, விரட்ட ஓடாத விருந்தாளியா இருக்குன்னு சொல்லேன்...'
-பர்வதவர்த்தினி, பம்மல்.
'வேலை சொல்லியே கொல்றீயேடி? நான் வீட்டைவிட்டு எங்கேயாவது போறேன்...'
'அப்படியே இந்தத் துணிகளை அயர்ன் பண்ண கொடுத்துட்டு போயிடுங்க...?'
-அ.ரியாஸ், சேலம்.
'முதியோர் இல்லத்துல அம்மாவுடன்தான் இருப்பேன்னு என் மனைவி அடம் பிடிச்சாள்...'
'அப்புறம்...'
'அவளை அங்கே சேர்த்துட்டு, அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்...'
'என்னங்க இது? முதியோர் இல்லத்துல இருந்து விண்ணப்பம் வாங்கிட்டு வந்திருக்கீங்க?'
'நீ தானே அம்மாவை பிரிஞ்சு என்னால் இருக்க முடியலைன்னு சொன்னே...?'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
'வீட்டுல மனைவி, அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து உதைக்கிற அளவுக்கு என்ன பண்ணீங்க?'
'அம்மா செய்ததும் தப்புதான். அதுக்கு நீ பதிலடி கொடுத்ததும் தப்புதான்னு சொன்னேன்...'
'மனைவியே ஆனாலும் தலையை விரிச்சிப்போட்டுக்கிட்டு நின்னால் நான் பின்னிடுவேன் பின்னி...'
'பின்னல் மட்டும்தானே? பூவும் வச்சு விடுவீங்களா?'
'எங்க அம்மாவுக்கும் உனக்கும் அடிக்கடி சண்டை வர்றதால அவங்களை ஏதாவது ஹோமில் சேர்த்துடலாமுன்னு இருக்கேன் சரசு..'
'வேண்டாம்ங்க.. அங்கே போயி முகம் தெரியாதவங்களிடம் சண்டை போடுவாங்க... பிரச்னை பண்ணுவாங்க.. தேவையா அது...'
'விருந்தாளிங்க.. இன்னிக்கே கிளம்பினாலும் கிளம்பிடுவாங்க.. சரசு...'
'சொன்னாங்களா?'
'எவ்வளவு நாள் தங்குறீங்கன்னு கேட்டேன்.. அது உங்க உபசரிப்பைப் பொறுத்துன்னு சொன்னாங்க?'
'ஆபிஸ் வேலையை வீட்டுல வந்து செய்யாதீங்க... எத்தனை முறை சொல்லியிருக்கேன்...?'
'கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா தூங்க விடும்மா...?'
'பேசறதுல எனக்கும் என் மனைவிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு?'
'என்ன வித்தியாசம்...?'
'நான் பட்டும் படாமலும் பேசுவேன்.. என் மனைவி பட்டு, பட்டுன்னு பேசுவா?'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தினப்பலன்கள் - சிம்மம்
சிரி... சிரி...

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் சிறை
தனிநபர்: 20 லட்சம் நூல்கள்
வீடியோக்கள்

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

