கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டத்துக்கு உள்பட்ட பீம்காட் வனவிலங்கு சரணாலயத்தில்தான் நாட்டிலேயே மிக அதிகமாக கரும் சிறுத்தைகள் உள்ளன. இதேபோல் உத்தர கன்னடாவில் அமைந்துள்ள காளி புலிகள் சரணாலயத்தில் 200 சிறுத்தைகள் உள்ளன. அவற்றை பார்ப்பது அரிது.
கபிணியில் உள்ள ஒரு ஏரியில் 'சாயா' என்ற கரும்சிறுத்தை தண்ணீர் குடிப்பதை ஒருவர் 'கிளிக்' செய்து வெளியிட்டார். இதனை பார்க்க விரும்பி கபிணி பகுதிக்கு ஏராளமானோர் வந்தனர். 20152022இல் அது வலிமையுடன் கம்பீரமானது. கபிணியில் அதன் ராஜ்யம்தான்.அந்த நிலையில் கடைசியாகப் பார்த்தபோது, அதன் வயது பதிமூன்று இருக்கும் என மதிப்பிட்டனர்.
பிறகு அதை காணவில்லை.
பொதுவாக, சிறுத்தைகள் 1214 வயது வரை தான் வாழ்கின்றன. பத்ரா பகுதி உப்பங்கழியின் கரையில் சிறுத்தை குடும்பத்தை இதுவரை மொத்தம் ஆறு தடவை பார்த்துள்ளனர். இந்தக் குடும்பத்தில் ஒரு கருமையான குட்டி ஒன்று துல்லிக் குதித்து ஓடுவதையும் பார்த்துள்ளனர். தற்போது அது தான் டார்கெட். கருப்பு வண்ணச் சிறுத்தை குட்டிக்கு வயது 34 மாதங்கள்தான் இருக்கும் என கணித்துள்ளனர்.மூன்று சிறிய சிறுத்தை குட்டிகள் இணைந்து விளையாடியுள்ளன.
அதில் ஒன்று தான் கருப்பு. கருப்புச் சிறுத்தை ஒரு தனி இனம் அல்ல.அவையும் சிறுத்தை தான். அவற்றின் தோல்கள், ரோமங்கள் அதிகப்படியான கருமை நிறமியை வெளிப்படுத்துகின்றன. அது மெலினிசம் என அழைக்கப்படும் நிலை.இது அவற்றின் மீது ஒளி ஒரு கோணத்தில் மேலே தாக்கும் போது அப்படி தெரிகிறது என வன காப்பாளர்கள் கூறுகின்றனர்.
உலகில் உள்ள 33 காட்டின பூனைகளில் உருவத்தில் பதிமூன்றில் மட்டுமே கருப்பு நிறம் பதிவாகியுள்ளது. இந்தியாவைத் தவிர, மலேசியாவின் சில பகுதிகளிலும், இந்தோனேஷியாவின் ஜாவாவிலும், கென்யா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கரும் சிறுத்தைகள் காணப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.