நம்ம எக்மோர்...

எழும்பூர் தொகுதி மக்கள் க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து 'நம்ம எக்மோர்' ஆஃப்பில் இணைந்து தமிழ்நாடு அரசு திட்டங்களை அறியலாம்.
நம்ம எக்மோர்...
Published on
Updated on
1 min read

எழும்பூர் தொகுதி மக்கள் க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து 'நம்ம எக்மோர்' ஆஃப்பில் இணைந்து தமிழ்நாடு அரசு திட்டங்களை அறியலாம். எம்எல்ஏ ஐ.பரந்தாமனை கைப்பேசியின் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம். அவரின் அன்றாடப் பணிகள், பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பேட்டிகள், சட்டப்பேரவையில் பேசிய பேச்சுகள், அவர் ஆற்றிய சாதனைகள் போன்றவற்றை அறியலாம்.

சென்னையில் தொழிலாளர்கள் நிறைந்த எழும்பூர் தொகுதியில் வீடுகள்தோறும் க்யூ.ஆர். கோடுகள் ஓட்டப்பட்டுள்ளன.

'இது எப்படி சாத்தியமாயிற்று' என்பது குறித்து அவரிடம் பேசியபோது:

'எழும்பூர் சட்டப் பேரவைத் தொகுதி மக்களுக்குத் தேவையான உதவிகளை, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறேன். அவர்கள் விரும்பும் இடத்திலேயே நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. பூபதி நகர் உள்ளிட்ட பல இடங்களில் அரசு நிலங்களில் வசிப்போருக்கு பட்டாக்கள் பெற்றுத் தரப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அனைத்து மக்களையும் சந்தித்துப் பேச நினைக்கிறேன். அதற்காக இணையத்தை நாடியிருக்கிறேன்.

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்யவும், தகுதியிருந்து அரசு நலத் திட்ட உதவிகளைப் பெற முடியாமல் இருப்பவர்களின் விவரங்களைச் சேகரித்து அவர்களுக்கு உதவிகளைப் பெற்றுத் தரவும், மக்களின் குறைகளைக் கேட்டறியவும் வீடு வீடாக சென்று நானும், ஐம்பதுக்கும் மேற்பட்ட சமூகச் சேவையாளர்களும் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுள்ளோம். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தும் நலத்திட்ட உதவிகள் அடங்கிய கையேடுகளை வீடுகள்தோறும் வழங்குகிறோம்.

அரசு நலத் திட்ட உதவிகளுக்காகவும், என்னை சந்திக்க விரும்புவோர் எளிதில் சந்திக்கும் வகையில் உருவானதுதான் 'க்யூ.ஆர்.கோடு' முறை. இந்த க்யூ.ஆர். கோடை கைப்பேசியில் ஸ்கேன் செய்து, 'நம்ப எக்மோர்' ஆஃப்பை பின்தொடரலாம். அதில், கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்தவுடன், பெயர், முகவரி போன்ற சில தகவல்கள் கேட்கப்படும். பதிவு செய்தவுடன், என்னை எளிதில் தொடர்பு கொள்ள வாய்ப்பு உருவாக்கலாம். அரசு நலத் திட்ட உதவிகள், எனது அன்றாட நிகழ்வுகளை அறியலாம்.

2025 பிப். 23இல் இந்த 'க்யூ.ஆர். கோடு ஆஃப்' முறையை உருவாக்கினேன். இரு வாரங்களில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் க்யூ.ஆர். கோடு ஒட்டப்பட்டுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஃப்பில் இணைந்துவிட்டனர். தொடர்ந்து தொகுதி முழுக்க விடுபட்ட வீடுகளில் ஓட்டும் பணி நடைபெறுகிறது' என்கிறார் பரந்தாமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com