நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சாட்ஜிபிடி ஹெல்த் அறிமுகம்

சாட்ஜிபிடி ஹெல்த் எனும் புதிய சேவையை ஓபன் ஏ.ஐ. நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 7:04 pm IST

அ.சர்ப்ராஸ்

சாட்ஜிபிடி ஹெல்த் எனும் புதிய சேவையை ஓபன் ஏ.ஐ. நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் முதல் முறையாக இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்களுக்குத் தங்களின் உடல்நிலையின் அடிப்படையில் மருத்துவ ஆலோசனைகளை சாட் ஜிபிடி வழங்குகிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் அவரவர் உடல்நலத்துக்கு ஏற்ற ஆலோசனைகளையும், அதை அவரவர் பகுதிகளில் எந்த இடங்களில் பெறலாம் என்பதையும் சாட்ஜிபிடி அளிக்கிறது. தற்போது இணையதளத்திலும், ஐ.ஓ.எஸ். தளங்களிலும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இந்தச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் தனது மருத்துவ வரலாறு இணைத்து, அதற்கான மருத்துவச் சேவை பதில்களை ஏ.ஐ. மூலம் கேட்டுப்பெறலாம். தனிப்பட்ட உடல்நல ஆலோசனைகளைப் பெறுவதற்காகப் பயனாளர்கள் தங்களின் செயலியில் ஹெல்த் தரவுகளை இணைத்து, ஆலோசனைகளைப் பெறலாம். இந்தத் தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் ஓபன் ஏ.ஐ. நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

முந்தைய உடல்நலத் தேடல்களை மீண்டும் பெறும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் 30 கோடிக்கும் அதிகமான மருத்துவம் சார்ந்த கேள்விகள் கையாளப்படுவதாக ஓபன் ஏ.ஐ. நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ ஆய்வு அறிக்கைகளைப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்த மருத்துவரைச் சந்திப்பதற்கான நேரத்தை முன்பதிவு செய்தல், மருத்துவ ஆலோசனைகளைத் தெளிவுபடுத்திக்கொள்ளுதல் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றைப் பயனர்கள் பெறலாம் என்றும் ஓபன் ஏ.ஐ. தெரிவித்துள்ளது.

இந்தச் சேவை வரும் காலங்களில் பிற நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.