நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கடலில் மிதந்த இரும்புக் குண்டுகள்

வழக்கம்போல ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் உள்ள வடகிழக்குக் கடற்கரையில் அண்மையில் ஒருநாள் மக்கள் நிரம்பி வழிந்தனர்.

News image

குண்டுகள்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 7:43 pm IST

வழக்கம்போல ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் உள்ள வடகிழக்குக் கடற்கரையில் அண்மையில் ஒருநாள் மக்கள் நிரம்பி வழிந்தனர். மாலை மயங்கும் நேரத்தில் மக்களை பிரமிக்க வைக்கும் அந்தச் சம்பவம் நடைபெற்றது. திடீரென்று கடலில் பல இரும்புக் குண்டுகள் மிதந்து வந்தன. அவை நேரமாக, நேரமாகப் பெரிதாக வீங்க ஆரம்பிக்க, மக்கள் இப்போது பயப்படத் தொடங்கினர்.

அந்தக் குண்டுகளை முதலில் பார்த்த உள்ளூர்வாசியான ட்ரெவார் கைல், மூன்று குண்டுகளைப் பார்த்தேன். அவை எம்பிக் குதித்தவாறே கடலின் மீது பாய்ந்து வந்தன. உடனே அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.என்றார்.

அவர்கள் அங்கு வந்து ஒரு தடுப்புப் பகுதியை நிர்மாணித்தனர். யாரும் எல்லையைத் தாண்டி கடலுக்குள் போகக் கூடாது' என்று அறிவித்தனர். அவர்கள் குயின்ஸ்லாந்து ஃபயர் அன்ட் ரெஸ்க்யூ பிரிவுக்குத் தகவலைத் தெரிவிக்க, விசேஷ தீ அணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு வந்தனர்.

பின்னர், ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தினர் வந்து இதை ஆராய்ந்தனர். சிறிது நேரத்தில் அவர்களால் அவை விண்வெளிப் பந்துகள் என்று அறிவிக்கப்பட்டன.

ஃப்ளின்டர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிஸ் கார்மன், ஏராளமான ராக்கெட்டுகளும் விண்கலங்களும் திரவ எரிபொருள் அமைப்பைக் கொண்டுள்ளன. அவை இந்த வலிமை வாய்ந்த உலோகக் குண்டுகளில் மிக அதிக அழுத்தத்துடன் வைக்கப்படுவது வழக்கம் என்றார்.

மேலும் அவர், இவை ராக்கெட்டுகளின் கழிவுப் பொருள்கள். ராக்கெட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட இவை வானிலேயே எரிந்து விடும். எரியாத சில பகுதிகள் இப்படி பூமியில் விழுவது வழக்கம். இவை மிக அதிக உஷ்ணநிலையில் தான் எரியும். அது இல்லாத போது வளி மண்டலத்திருந்து கீழே வந்து விழுந்து விடும் என்றார்.

எந்த ராக்கெட்டிலிருந்து இவை கீழே விழுந்தன' என்பது யாருக்கும் தெரியவில்லை. இப்படி இன்னும் பல கழிவுப் பொருள்களும் பூமியில் அவ்வப்பொழுது விழுவது வழக்கம் தான்! இவை ஆபத்தானவை இல்லை என்றாலும், உள்ளூர் அதிகாரிகள், யாரும் இதன் அருகே போக வேண்டாம்' என்று மக்களை எச்சரித்தனர்.

இவை ராக்கெட்டிலிருந்து தான் விழுந்தது என்பது என்ன நிச்சயம்? ராணுவத்தில் உருவாக்கப்பட்டு சோதனைக்காக வீசப்பட்ட அபாய ஆயுதங்கள் தாம் இவையா? அல்லது ஒருவேளை அயல்கிரகவாசிகள் இதைப் போட்டிருந்தால்?'.... என்று அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது' என்றனர் மக்கள்.

2026, ஜூலை 4-ஆம் தேதி குயின்ஸ்லாந்து தீயணைக்கும் பிரிவு அதிகாரிகள் சமூக ஊடகங்களை அழைத்து, இந்தக் குண்டுகளை எடுத்து யாரும்ஆராய வேண்டாம். இது போன்ற குண்டுகளைக் கடலில் கண்டவுடன் அதிகாரிகளிடம் தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தனர்.

இந்த மூன்று குண்டுகளை அடுத்து மேலும் பல இரும்புக் குண்டுகள் பல்வேறு கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்களுக்கு இப்போது, சுவையான சூடான பேசுபொருள் வானிலிருந்து விழுந்த இந்த மர்ம குண்டுகள்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.