'கைப்பேசியில் பேசும் நம்முடைய நண்பரோ, உறவினரோ ஏ.ஐ. வாயிலாகவும் பேசலாம். அவர் பேசுவதாக நமக்கு வரும் காணொலியும்கூட ஏ.ஐ.யாக இருக்கலாம்' என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த ஏ.ஐ. பாதுகாப்பு ஆலோசகர் முனைவர் ஹர்ஷா இ.தென்னரசு.
செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.) தாக்கம் உலக அளவில் அதிகரித்துவிட்ட நிலையில், ஏ.ஐ.யில் உள்ள பாதக அம்சங்கள் குறித்து தென்னரசுவிடம் பேசியபோது:
'கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, பெருநிறுவனங்களின் சார்பில் அந்த நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, 'மெய்நிகர் உதவியாளர் பேசுகிறேன்' என்று கூறி நம்மிடம் பிரச்னைகளைக் கேட்டு, தீர்வும் சொல்லும். அதுபோல்தான் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஒருவர் மாதிரியே பேச வைக்கவும் முடியும்.
அதாவது, ஏ.ஐ. இணையத்துக்குச் சென்று 'வாய்ஸ் ஏஜென்ட்' என்ற ஆப்ஷனை ஒருவர் தேர்வு செய்து, உள்நுழைந்து, பதிந்துவிட்டால் போதும். அவரின் குரல் போலவே அவருக்கு வருகை தரும் கைப்பேசி அழைப்புகளுக்கு ஏ.ஐ. பதில் கூறும்.
நண்பர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் என்று யாராக இருந்தாலும், அதற்கேற்றவாறு பதில் அளிக்கும். அதே நேரத்தில், இதுபோன்று நம்மிடம் பேசுவர் அவர்தானா அல்லது ஏ.ஐ.யில் நுழைக்கப்பட்டுப் பேசப்படுபவரா? என்று உறுதி செய்ய வேண்டும். இதில் சற்று முறைகேடுகள் நடைபெறவும் வாய்ப்புண்டு. ஏ.ஐ.யில் வாய்ஸ் ஏஜென்ட்டில் இணைத்துள்ளவரை சைபர் குற்றவாளிகள் வேறு யாரேனும் உள்நுழைந்து, அந்த போனை ஹாக் செய்து, பணம் பறிக்கவும் முயலமுடியும். ஆகவே பேச்சில் கவனம் தேவை.
காணொலி: அண்மைக்காலமாக வருகை தரும் ஏ.ஐ. காணொலிகள் பல உண்மையாக இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அது உண்மையான காணொலியாக என்பதை அறிய வேண்டும். அவரிடம் உறுதிப்படுத்திக் கொண்டு அறியவேண்டும். டபிள்யூடபிள்யூடபிள்யூ. எப்ஏசிஇஓஎப்எப்.காம் என்ற இணையதளத்தில், 'பிரேக்கிங் விடியோ' என்ற பேஜில் உள்நுழைந்து, கண்டறிந்து உண்மையான காணொலியா என்பதை அறியலாம். இதில், ஒருவரின் பெயரில் போலியாக ஏ.ஐ.யில் காணொலியைத் தயாரித்து, பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் கவனமாக இருக்கவேண்டும்.
அண்மையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைவுகூரவேண்டும். போலியான திருமண இணையதளத்தை உருவாக்கி சைபர் குற்றவாளிகள், ஒரு பெண்ணிடம் பேசியுள்ளனர். பேசியவர் பெண்ணின் வாட்ஸ் ஆப் காலில் வந்து, தான் அமெரிக்காவில் பொறியாளராகப் பணிபுரிவதாகக் கூறி, அந்தப் பெண்ணிடம் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நாளில் சென்னைக்கு வந்து சந்திப்பதாகக் கூறியுள்ளார்.
பின்னர், அதற்கு முந்தைய நாள் அவர் பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் காலில் வந்து, தன்னை புதுதில்லி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பிடித்துவிட்டதாகவும், அவர்களிடம் அந்த பெண்ணுக்குப் பரிசளிக்க எடுத்து வந்த வைர நெக்லஸ் பிடிபட்டுவிட்டதாகவும், தன்னிடம் இருந்த அனைத்து கார்டுகள், பணத்தை அவர்கள் எடுத்துகொண்டு ரூ.1 லட்சம் அளித்தால் விடுவிப்பதாகவும் கூறியுள்ளார்.
அந்தப் பெண்ணும் அவர் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.1 லட்சம் அனுப்பியுள்ளார். அரை மணி நேரம் கழித்து, இன்னொரு அதிகாரிக்குத் தரவேண்டும் என்று கூற, மீண்டும் ரூ.1 லட்சம் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். பின்னர், அவருடைய கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுவிட்டது. இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்கள் ஏ.ஐ. வாயிலாக நடைபெறுகிறது. 'டிஜிட்டல் அரெஸ்ட்' போன்றதொரு முறைகேடுகள் ஏ.ஐ.வாயிலாக நடைபெறுகிறது.
நேர்காணல்கள்: பெரு நிறுவனங்கள் தற்போது நேர்காணல்களை ஏ.ஐ.வாயிலாக நடத்துகின்றன. பல நிறுவனங்களில் ஏ.ஐ. வாயிலாகத் தேர்வாகிய சிலர் நேர்காணலின்போது சொன்ன அறிவு, தெளிவுகள் பணியின்போது இல்லை. விசாரித்தபோது, ஏ.ஐ. வழியான நேர்காணலை தாங்களும் ஏ.ஐ. வழியாக இணைத்தது தெரியவந்தது. நேர்காணலிலும் கவனம் இருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் தற்போது ஏ.ஐ. பற்றிய புரிதலும், தெளிவும் அவசியம் வேண்டும். அரசுத் துறைகளே ஏ.ஐ. குறித்த ஓரிரு நாள்கள் பயிற்சிகளை நடத்துகின்றன. இணையதளங்கள், யூடியூப் உள்ளிட்டவை வாயிலாக, ஏ.ஐ. குறித்த விவரங்களை ஒவ்வொருவரும் அறிய வேண்டும்' என்கிறார் ஹர்ஷா இ.தென்னரசு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP





