பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பேல் பூரி - 12-7-2026

ஏன் உன் காதலனை அடியோடு மறந்துட்டே?

News image
Updated On :12 ஜூலை 2026, 4:07 am IST

கண்டது

(தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்துக்கு அருகேயுள்ள கிராமத்தின் பெயர்)

'எழுத்தாணி வயல்'

-பொன்னியின் செல்வன், தஞ்சாவூர்.

(நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

'டுபாக்கூர்'

-ம.ஸ்ரீகிருஷ்ணா, மயிலாடுதுறை.

(நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)

'பூவைத்தேடி'

- நாகை பாபு

கேட்டது

(விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இளம்பெண்கள் இருவர் பேசியது)

'ஏன் உன் காதலனை அடியோடு மறந்துட்டே?'

'பின்னே என்னடி... எத்தனை 'அடி' அவனை நான் அடிச்சாலும் அழாமல் அப்படியே நிற்குறான்டி!'

-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

(சென்னையில் ஹோட்டல் ஒன்றில் சர்வரும் வாடிக்கையாளரும்)

'என்னப்பா சர்வர்... நான் தோசை தானே சாப்பிட்டேன்... சப்பாத்திக்கும் சேர்த்து பில் போட்டிருக்க?'

'பவர் கட் ஆனதும், இருட்டுல தெரியாம எதுத்த சீட்டுல இருந்தவர் இலையிலிருந்த சப்பாத்தியையும் எடுத்துச் சாப்பிட்டுட்டீங்க...அதனால தான்!'

-ப.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம்.

(காஞ்சிபுரத்தில் பிரபலமான கோயிலில் இரு பெண்கள்)

'எதுக்காக நீங்களும் உங்க புருஷனும் தனித்தனியா வந்து சாமி கும்பிட்டுட்டுப் போறீங்க?'

'புது செருப்பை நம்பி வெளியே விட்டுட்டு வர முடியலியே!'

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

யோசிக்கிறாங்கப்பா!

வயது அதிகமாக அதிகமாக கற்க வேண்டியதைவிட

ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் அவசியமாகிறது.

-பு.திலகப்ரியா, கோவை.

மைக்ரோ கதை

பெருவிவசாயி மூர்த்திக்கும், சிறு விவசாயி கோவிந்தனுக்கும் அருகருகே நிலங்கள் இருந்தன.

மூர்த்தி காரிலும், கோவிந்தன் நகரப் பேருந்திலும் பயணிப்பதால், மூர்த்திக்கு எப்போதும் கர்வம் உண்டு. மேலும், அவர் பட்டதாரி என்பதால் ஆங்கிலம் கலந்து பேசுவார்.

இருவருக்கும் நடைபெற்ற ஓர் உரையாடலின்போது, 'எந்த விவசாயிக்கும் ஆங்கிலம் தெரியாது' என்றார் மூர்த்தி. இதை கோவிந்தன் மறுத்தார்.

அதற்கு மூர்த்தியோ, 'அப்படியானால் நீங்கள் ரெண்டு தமிழ் வாக்கியங்களைச் சொல்லி, அதுக்கு நிகராக ஆங்கில வாக்கியத்தைக் கூறுங்கள். சரியாகச் சொன்னால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்' என்றார்.

உடனே கோவிந்தனும், 'ஒன்று - கதவுகள் திறக்கப்படுகின்றன; டோர்ஸ் ஆர் ஒப்பனிங். இரண்டு- கதவுகள் மூடப்படுகின்றன. டோர்ஸ் ஆர் க்ளோசிங்' என்றார்.

தினமும் பேருந்தில் பயணிக்கும் போது கேட்ட அந்த இரு வாக்கியங்களைத்தான் கோவிந்தன் கூறினார்.

தோற்ற மூர்த்தி மறுநாள் மொட்டைத் தலையுடன் வயலுக்கு வந்தான்.

- ச.சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

எஸ்எம்எஸ்

'இன்றைய இலவசம் நாளைய கடன்'

-சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

அப்படீங்களா!

ஒவ்வொரு புகைப்படத்திலும், விடியோக்களிலும் கூடுதல் தகவல்களைச் சேர்க்கும் புதிய சேவையை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.

இளைஞர்களிடம் பிரபலமாக உள்ள இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் பதிவிடும்போது புகைப்படங்களை வைத்தோ அல்லது விடியோக்கள் வைத்தோ பகிரப்படுகிறது.

இதில் ஒரு புகைப்படத்துக்கும், விடியோக்களுக்கும் ஒரே ஒரு முறை மட்டும் தகவல்களை (கேப்ஷன்) அளிக்கும் நடைமுறை இருந்தது.

தற்போது ஒவ்வொரு புகைப்படத்துக்கும் ஒரு தனித் தகவலும், விடியோக்களுக்கு அதிகமான தகவலும் அளிக்கும் சேவை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரீல்ஸ்களில் 20 புகைப்படங்களுக்கு 20 தகவல்களை அளிக்கலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்த முதலில் 'கிரேயட்' தேர்வு செய்து, புகைப்படங்கள் அல்லது விடியோவை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் 'கேப்சன் - மல்டிபிள் கேப்சன்ஸ்' எனத் தேர்வு செய்ய வேண்டும். இதில் நாம் தகவல்களைப் பதிவு செய்ய இடமளிக்கப்படும். அதில் தகவல்களைப் பதிவு செய்துவிட்டு பதிவேற்றம் செய்யலாம்.

அ.சர்ப்ராஸ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.