பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சிரி... சிரி...

'என்னப்பா... பெண்ணை நல்லா பார்த்துக் கொள்வாயா?'

News image
Updated On :12 ஜூலை 2026, 4:11 am IST

'என்னப்பா... பெண்ணை நல்லா பார்த்துக் கொள்வாயா?'

'சந்தேகம் இருந்தா அவ தங்கச்சியையும் சேர்த்து அனுப்புங்க!'



'உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் போது நீங்கள் மனைவியிடம் மனம் விட்டுப் பேச வேண்டும்...'

'யார் மனைவியிடம் டாக்டர்?'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'வீட்டோட மாப்பிள்ளையா போனது தப்பாப்போச்சுன்னு எதைவச்சு சொல்றே?'

'நான் அவங்க வீட்டுக்குப் போனதும் சமையல்காரர், தோட்டக்காரங்களை எல்லாம் வேலையைவிட்டு நிறுத்திட்டாங்க!'

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.



'இந்த ஊர்ல, இது பேர் போன ஹோட்டல்!'

'அதான், நேம் போர்டைக் காணோமா?'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'டாக்டர்... கால்ல ஆபரேஷன் முடிஞ்சு நான் நல்லா நடந்தபிறகுதான் ஃபீஸ் தருவேன்...'

'அது நடக்காத காரியம்!'



'எனக்குதான் சுகர் இல்லையே... அப்புறம் ஏன் காபில சர்க்கரை போடாமக் கொடுக்கிறே?'

'வீட்டுல சுகர் இல்லைங்க!'

-தீபிகா சாரதி, சென்னை.

'டீக்கடை பெஞ்சில் படுத்து ஏன் தூங்குறே?'

'கடை ஓபன் ஆனதும் பெட் சாயா குடிக்க!'



'இவள் உன் அத்தை பெண்ணா... மாமன் மகளா?'

'என்னை மாமான்னு கூப்பிடும் அத்தை மகள்!'



'பூஜ்ஜிய தோசை ஒன்று போடு...'

'அப்படி ஒரு தோசையே கிடையாதே!'

'அட... முட்டை தோசையை சொன்னேன்.'



'இலைக்கு முன்னால் ஒரு கொட்டாங்கச்சியை ஏன் வச்சிட்டுப் போறார்?'

'அதில் இளநீர் பாயசம் ஊற்றுவாங்க!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.



'குடிச்சிட்டு வீட்டுக்குப் போனா என் மனைவி ரொம்ப பொல்லாதவளா மாறிடுவா!'

'மற்ற நேரங்கள்ல ..?'

'சுமார் பொல்லாதவ!'



'உங்க ஹஸ்பென்ட் நடு இரவுல சிரிக்கிறது உங்களுக்கு எப்படி மேடம் தெரியும்?'

'அக்கம் பக்கத்துல உள்ளவங்களே கதவைத் தட்டிக்கேட்கும்போது எனக்கு எப்படி டாக்டர் தெரியாம இருக்கும்?!'



'காலம் எப்படி மாறிப் போச்சுப் பாருங்க...?'

'என்ன விஷயம்?'

'எதிர் வீட்டுல புருசனும் பொண்டாட்டியும்தான் இருக்காங்க. அதைப் போய் ஜாயிண்ட் ஃபேமிலின்னு சொல்லிக்கிறாங்க!'



'படத்துல அப்படி என்னதாங்க சஸ்பென்ஸ் இருக்கு?'

'ஏழெட்டு தடவைப் பார்த்தால்கூட கதை என்னன்னு யாருக்குமே புரியாது, சார்!'



'மகாலட்சுமி தாயி...'

'இருந்த பழைய சாதத்தை ஐயாவுக்குப் போட்டு ஆபீசுக்கு அனுப்பிட்டேன். நீ கொஞ்சம் வெய்ட் பண்ணுப்பா... சூடா பூரி பொரிக்கப் போறேன், தர்றேன்!'



'தப்பு செய்தவங்க தான் பொண்டாட்டிக்குப் பயப்படுவாங்க... நீங்க என்ன தப்பு செஞ்சீங்க?'

'உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதைத் தவிர நான் வேற எதுவுமே செய்யலைம்மா!'



'சின்ன பையன் பார்மசி வச்சு ஓஹோன்னு இருக்கான்!'

'மருந்துக்குக் கூட படிப்பு வரலைன்னு வருத்தப்படுவீங்களே... அந்த பையனா சார்?'



'நாம பிச்சைக்காரர்கள்னு அந்த சர்வருக்கு தெரிஞ்சிடக்கூடாதுப்பா!'

'ஏண்ணே?'

'தெரிஞ்சிட்டா, டிப்ஸ் அதிகமா எதிர்பார்ப்பாங்க!'



'நீ கோபப்படாமல் இருந்தா எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா?'

'எதையாவது பேசி என் கோபத்தைக் கிளறாதேய்யா!'

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.