கண்டது
(அரக்கோணம் அருகே ஒரு கிராமத்தின் பெயர்)
'அருகிலபாடி''
-டி.கே.சுப்பிமணியன், விழுப்புரம்.
(நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'நீர்முளை''
-எம்.ஸ்ரீகிருஷ்ணா, மேலமங்கைநல்லூர்.
(தாம்பரத்தில் ஒரு லாண்டரிக்கடையின் பெயர்)
'வெளுத்துக்கட்டு''
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
(பொள்ளாச்சியில் ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்த வாசகம்)
'வாழ்வதற்கு பொருள் வேண்டும்.
வாழ்வதிலும் பொருள் வேண்டும்.''
-கே.கவின், பொள்ளாச்சி.
கேட்டது
(திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருவர் பேசியது)
'நிறைய கடன் வாங்கியிருக்கீங்களே... பயமா இல்லே?''
'இருக்கு... கொடுத்தவங்களுக்கு!''
-க.நாகமுத்து, திண்டுக்கல்.
(விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருவர் பேசியது)
'பிளாட்பாரத்துல உட்காரணும்னா டிக்கெட் எடுக்கணும்... ஃபைன் போடுவாங்க!''
'நானே 'பிளாட்பாரத்துல'தான் தங்கியிருக்கேன்... நான் எதுக்கு டிக்கெட் எடுக்கணும்?''
-கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
(திருச்சி பூங்கா ஒன்றில் இருவர் பேசியது)
'எங்க வீட்ல அவங்க வெச்சதே சட்டம்!''
'அவங்கன்னா... மனைவியும், அம்மாவுமா?''
'ம்ஹும்... பசங்க!''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
வாழ்க்கை ஒரு கிரிக்கெட் போட்டி மாதிரிதான். நாம் ரன் எடுக்க ஒருவர்தான் உதவுவார்; ஆனால், 11 பேர் தடுப்பார்கள்.
-என்.ஆர்., சென்னை.
மைக்ரோ கதை
ஒரு கொடுங்கோல் அரசரிடம் தானம் வாங்க புலவர் ஒருவர் வந்தார்.
அவரிடம் மன்னர், 'என் கண்களில் ஒன்று செயற்கையானது. அது எதுவென்று கூறினால் பரிசு தருகிறேன்...'' என்றார்.
உற்றுப் பார்த்த புலவர், 'உங்களுடைய இடது கண்தான் செயற்கையானது'' என்றார்.
அரசரோ வியப்புடன், 'எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?'' என்று கேட்டார்.
'அந்தக் கண்ணில்தான் சிறிது கனிவு தெரிகிறது'' என்று புலவர் அமைதியுடன் பதிலளித்தார்.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
எஸ்.எம்.எஸ்.
'குறைவாக எதிர்பாருங்கள்... ஏமாற்றங்கள் வலிக்காது.''
-சிவம், திருவள்ளூர்.
அப்படீங்களா!
'யூசர் நேம்' என்ற புதிய சேவையை வாட்ஸ்ஆப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
தற்போது வாட்ஸ்ஆப்பில் பிறருடன் தகவல்களைப் பரிமாற வேண்டுமென்றால் அவர்களின் தொலைபேசி எண்ணைப் பெற்றுச் சேமிக்க வேண்டும்.
ஆனால், இந்த புதிய சேவை மூலம் வாட்ஸ்ஆப்பில் பெயரை மட்டும் வைத்து தகவல்களைப் பரிமாறலாம்.
தொலைபேசி எண்ணைப் பகிராமல் பிறருடன் பெயரை வைத்து தொடர்பு கொள்வது பாதுகாப்பான அம்சமாகக் கருதப்படுகிறது.
இதற்கான பயனாளர்கள் தங்களுக்கு விருப்பான தனித்துவமான பெயரை உருவாக்கிக் கொள்ளலாம்.
இந்த உரையாடல்களில் நமது தொலைபேசி எண் பிறருக்குத் தெரியாது.
இந்தப் பெயரை தேர்ந்தெடுப்பதில் வாட்ஸ்ஆப் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர உள்ளது. 35 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும். குறைந்தது ஒரு ஆங்கில எழுத்து, 0-9 வரையிலான எண்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
ஜ்ஜ்ஜ், .ஸ்ரீர்ம், . ய்ங்ற் போன்ற இணைதள முகவரிகளைப்போன்ற பெயர்களை வைக்க அனுமதி இல்லை.
தொலைபேசி எண்ணைப் பகிராமல் தேவையற்றவர்களுடன் குறுகிய உரையாடல்களுக்கு இந்தச் சேவை மிகவும் உதவியாக இருக்கும்.
பழைய முறைப்படி, எண்ணைப் பகிரும் சேவையைத் தொடர்வதற்கு வாட்ஸ்ஆப் அனுமதி அளிக்கிறது. விரைவில் இந்தச் சேவை அனைவருக்கும் பயன்பாட்டுக்கு வெளியாகும் எனவாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







