வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கோலிவுட் ஸ்டூடியோ!

மாரி செல்வராஜ் தன்னுடைய 6-ஆவது படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார்.

News image
Updated On :7 ஜூன் 2026, 4:05 am IST

இளையராஜா இசையில் மாரி செல்வராஜ்!

மாரி செல்வராஜ் தன்னுடைய 6-ஆவது படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோரை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த 'பைசன் காளமாடன்' திரைப்படம், கடந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

'கர்ணன்' திரைப்படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்தபோதே, தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கும் மற்றுமொரு படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. மிகுந்த பொருள்செலவில் பெரிய திரைப்படமாக அது உருவாகும் எனக் கூறப்பட்டது.

'பைசன் காளமாடன்' திரைப்படத்துக்குப் பிறகு தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. 'பைசன் காளமாடன்' படத்தின் ப்ரோமோஷன் வேளையிலும், அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவதாக மாரி செல்வராஜும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், மாரி செல்வராஜின் 6-ஆவது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இப்படத்துக்கு 'மஞ்சணத்தி' எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஒரு சிறப்பு காணொலியும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் அறிவிப்பு பற்றிய பதிவில் மாரி செல்வராஜ், 'அந்த உன்னதமான தருணம் இறுதியாக நிகழ்ந்துவிட்டது'' எனக் குறிப்பிட்டிருக்கிறார். நடிகர்கள் விவரம் இனிதான் அறிவிக்கப்பட இருக்கிறது.

Story image

கன்னட சூப்பர் ஸ்டாருடன் அபிஷன் ஜீவிந்த்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். அப்படத்தில் சிறியதொரு கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றவர், அடுத்ததாக நாயகனாகவே நடிக்கப்போகிறார்.

'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தில் அவருடைய உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கிய 'வித் லவ்' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் அபிஷன் ஜீவிந்த். இவருடன் இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருந்தார். பிப்ரவரி மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அப்படத்துக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அபிஷன் ஜீவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பைப் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் கெளதம் சிவராமன் இப்படத்தை இயக்குகிறார். அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு 'டூரிஸ்ட்

ஃபேமிலி', 'ஹார்ட் பீட்' போன்ற திரைப்படம், தொடர்களில் நடித்துப் பலருக்கும் பரிச்சயமான யோகலக்ஷ்மி, பிக் பாஸ் கானா வினோத் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். நடிகராக நடிக்கும் இரண்டாவது படத்திலேயே கன்னட சினிமாவின் உச்ச நடிகரான சிவராஜ்குமாருடன் அபிஷன் ஜீவிந்த் நடிப்பதற்குத் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Story image

சூழ்நிலைக்காக விருப்பங்களை மாற்றக் கூடாது - ஐஸ்வர்யாராய்!

லோரியல் பாரிஸ் பிராண்டின் அம்பாசிடராக கேன்ஸ் திரைப்பட விழாவில் பல வருடங்களாகத் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். 79-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா அண்மையில் முடிவடைந்திருக்கிறது. இந்தாண்டும் அவருடைய தனித்துவமான காஸ்டியூமில் கலந்துகொண்டிருக்கிறார்.

அங்கு ஊடகத்தினரிடம் பேசிய ஐஸ்வர்யா ராய், திரைத்துறைக்கு வர விரும்பும் புதிய தலைமுறையினருக்குச் சில வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். அவர், 'சினிமாவுக்குள் நுழையும் புதியவர்கள், முதலில் தங்களுக்குள் இருக்கும் உண்மையான ஆர்வம் எது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டும்.

ஏனெனில், உங்களது அந்த ஆர்வம்தான் கடினமான சூழ்நிலைகளிலும் உங்களை முன்னோக்கிச் செல்ல உதவும் அடித்தளமாகும். கலைத்துறையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் உங்களுடைய சொந்த விருப்பமாக இருக்க வேண்டும். பிறருக்காகவோ அல்லது சூழ்நிலைக் கட்டாயத்துக்காகவோ உங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது.

நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அந்தத் தேர்வுகளுக்கு இறுதிவரை நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்புதான் உங்களுக்கான தனி அடையாளத்தை இந்தத் துறையில் பெற்றுத் தரும்'' எனப் பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.