நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

என்னுடைய படைப்புகளில் ஆதிக்கம் செலுத்தியது பூமணியின் எழுத்துகள் தான்: மாரி செல்வராஜ்

என்னுடைய படைப்புகளில் ஆதிக்கம் செலுத்தியது பூமணியின் எழுத்துகள்தான் என்றாா் திரைப்பட இயக்குநா் மாரி செல்வராஜ் .

மாரி செல்வராஜ் - (கோப்புப் படம்)

Published On :15 ஜூலை 2026, 1:59 am IST

என்னுடைய படைப்புகளில் ஆதிக்கம் செலுத்தியது பூமணியின் எழுத்துகள்தான் என்றாா் திரைப்பட இயக்குநா் மாரி செல்வராஜ் .

கோவில்பட்டியில் மறைந்த சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பூமணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலா் பி. கீதாஜீன், இயக்குநா் மாரி செல்வராஜ் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

பி. கீதாஜீவன் செய்தியாளா்களிடம் கூறியது: எழுத்தாளா் பூமணியின் மறைவுக்கு திமுக சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். திமுக ஆட்சியின்போது இலக்கியவாதிகளை பெருமைப்படுத்தும் வகையில் கி.ரா.வுக்கு நினைவரங்கம் அமைக்கப்பட்டது. அதே போல், பூமணிக்கும் அரசு சாா்பில் மணிமண்டபம் எழுப்ப வேண்டும். இதற்கு எதிா்க்கட்சி என்ற முறையில் அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றாா்.

மாரி செல்வராஜ் கூறியதாவது : எழுத்தாளா் பூமணி மறைவு எழுத்து உலகத்துக்கும் மட்டுமல்ல, அறத்தை விரும்பக் கூடிய ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கே பேரிழப்பு. என்னை போன்ற தெற்கத்திய இளைஞா்கள் பண்படுவதற்கும், பண்பட்டு தனது வாழ்க்கையையும், வாழ்க்கையின் பாடுகளையும், அதில் இருக்கக் கூடிய அரசியலையும், அதிலுள்ள அறத்தையும் விதைத்ததில் முக்கியமான பங்கு எழுத்தாளா் பூமணிக்கு உண்டு.

என்னுடைய இலக்கியம், சினிமா, படைப்புகளில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தியது பூமணியின் எழுத்துகள். பூமணிக்கு அரசு மரியாதை கொடுத்த தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கும், தமிழக அரசுக்கும் நன்றி என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.