வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தாயும் மகனும் மேயர்கள்...

தாயும் மகனும் ஒருவர் பின் ஒருவராக மேயர்களாகி இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

News image
Updated On :7 ஜூன் 2026, 4:07 am IST

சக்ரவர்த்தி

தாயும் மகனும் ஒருவர் பின் ஒருவராக மேயர்களாகி இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளி குடும்பத்தார்தான் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

2026, மே 13 அன்று, 23 வயதான துஷார் குமார், 'எல்ஸ்ட்ரீ & போர்ஹாம்வுட்' மாநகர மன்றத்தின் மேயராகப் பதவியேற்க, மே 20 -இல், அவரது தாயாரும் கவுன்சிலருமான பர்வீன் ராணி, 'ஹெர்ட்ஸ்மியர் பரோ' மாநகர் மன்றத்தின் முதல் இந்திய வம்சாவளி மேயராகியுள்ளார்.

பத்தாண்டுகளுக்கு முன் ஹரியானாவிலிருந்து பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்த இந்தக் குடும்பத்துக்கு, அடுத்தடுத்த இந்த வெற்றிகள், இந்தியப் புலம்பெயர்ந்தோருக்கு மிகுந்த எழுச்சியூட்டுகின்றன.

10 வயது வரை ரோத்தக்கில் வசித்த துஷார் குமார், மிக இளைய இந்திய வம்சாவளி மேயர் ஆனார். இந்தக் குடும்பத்தின் பூர்விக இந்தியக் கிராமம் ஹரியானா, சோனிபட் மாவட்டம், கார்கோடாவில் உள்ள ரோஹ்னா ஆகும். 2013-இல் இங்கிலாந்துக்குக் குடிபெயர்வதற்கு முன் ரோத்தக் நகரில் வசித்து வந்தனர்.

'நாங்கள் எப்போதும் இந்தியாவில் வாழும் எங்கள் சொந்த பந்தங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் சொந்த ஊருக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்'' என்கிறார் துஷார் குமார்.

அந்நிய மண்ணுக்கு இடம்பெயர்ந்து வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப துஷார் குமார் பெற்றோர் தயாரானது, குழந்தைகளுக்குச் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையால்தான். அது தற்போது உண்மையாகியுள்ளது.

'ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் குடியேறிய பிறகு, எங்கள் குடும்பம் மெல்ல மெல்ல உள்ளூர் சமூகத்தின் ஒரு பகுதியாக மாறியது. காலப்போக்கில், இந்த ஈடுபாடு பொது வாழ்க்கைக்கு வழிவகுத்தது. நான், 'எல்ஸ்ட்ரீ & போர்ஹாம்வுட்' மாநகர சபையின் குடியிருப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் கட்சி கவுன்சிலராக அரசியலில் நுழைந்தேன். லண்டனில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு 20 வயது.

அதே நேரத்தில் எனது தாயார் உள்ளூர் குடிமை மற்றும் சமூகப் பிரச்னைகளில் பணியாற்றும் கவுன்சிலரானார். மேயர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு, அம்மா பர்வீன் ராணி தெருக்காட்சி, பூங்காக்கள், ஓய்வு, கலாசாரத் துறைக்கான அமைச்சரவை உறுப்பினராகவும், ஹெர்ட்ஸ்மியரின் துணை மேயராகவும், திரைப்படம், தொலைக்காட்சிக்கான தூதராகவும் பணியாற்றியுள்ளார். நான் 2025-இல் துணை மேயரானேன். இப்போது மேயர்'' என்கிறார் துஷார் குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.