நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பிஃபா உலகக்கோப்பை அறிமுகப் போட்டியில் ரசிகர்களைக் கவர்ந்த இந்திய வம்சாவளி வீரர்!

பிஃபா உலகக்கோப்பை அறிமுகப் போட்டியில் ரசிகர்களைக் கவர்ந்த இந்திய வம்சாவளி வீரரைப் பற்றி...

News image

நியூசிலாந்தின் சர்ப்ரீத் சிங் (இடது). - படம்: ஏபி.

Updated On :16 ஜூன் 2026, 5:34 pm IST

பிஃபா உலகக்கோப்பை அறிமுகப் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய இந்திய வம்சாவளி வீரர் சர்ப்ரீத் சிங் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இந்தாண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் ஜூன் 11 ஆம் தேதி தொடங்கிய, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சர்வதேச அளவில் அரசியல் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள சோஃபி கால்பந்து திடலில் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தங்களது தொடக்க போட்டியில் நேருக்கு நேர் மோதின. 84-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை 20-வது இடத்தில் உள்ள ஈரான் அணி எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இந்த ஆட்டத்தில், இந்திய வம்சாவளி வீரரான சர்ப்ரீத் சிங் தனது அறிமுகப் போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து அணிக்காக விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரரான சர்ப்ரீத், ஆக்லாந்தில் பிறந்தவர். ஈரானுக்கு எதிரான போட்டியில் கோல் அடிக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் பேஸ்லியால் தொடக்கத்திலேயே அணியில் இடம்பெற்ற அவர், 90-வது நிமிடத்தில் மாற்று வீரராக வெளியேற்றப்படும் வரை ஆட்டத்தில் முழுமையாக விளையாடினார்.

10 ஆம் நம்பர் ஜெர்ஸி அணித்து விளையாடிய சர்ப்ரீத், மொத்தமாக மூன்று அதிரடியாக ஷாட்டுகளை அடிக்க, அதில் 61-வது நிமிடத்தில் சர்ப்ரீத் அடித்த ஷாட்டை ஈரான் கோல் கீப்பர் அட்டகாசமாக தடுத்தார்.

நடப்பு பிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் மொத்தமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் விளையாடுகின்றனர். அவர்களில் ஆஸ்திரேலிய அணிக்காக நிஷான் வேலுப்பிள்ளை அதிரடியாக விளையாடியிருந்தார்.

ஆஸ்திரேலிய அணிக்காக முதல் கோல் அடித்த நெஸ்டோரி இரான்குண்டாவுக்கு பதிலாக 61-வது நிமிடத்தில் களமிறக்கப்பட்ட முன்கள வீரரான நிஷான் வேலுப்பிள்ளை, சிறப்பாக விளையாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார். அவரைப் போன்றே சர்ப்ரீத் சிங்கும் சிறப்பாக விளையாடி இந்திய ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

குரூப் ஜி பிரிவின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி, ஜூன் 21 ஆம் தேதி எகிப்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

Summary

New Zealand's attacking midfielder Sarpreet Singh became the first Indian-origin player to start in the FIFA World Cup. Sarpreet impressed on his debut as New Zealand played out a thrilling 2-2 draw against Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.